திருவின் குரல் ஒலித்ததா?

திருவின் குரல் விமர்சனம் !

இயக்குநர் – ஹரிஸ் பிரபு
நடிகர்கள் – அருள்நிதி , பாரதிராஜா , ஆத்மிகா
ஒளிப்பதிவு – சின்டோ பொடுதாஸ்
இசை – சாம் சி எஸ்
தயாரிப்பு – லைகா சுபாஸ்கரன்

இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் பாரதிராஜா, அருள்நிதி நடித்துள்ள படம் தான் “திருவின் குரல். கோபக்கார இளைஞன் அவன் குடும்பத்திற்கு ரௌடிகளால் வரும் பிரச்சனை அதை முறியடித்து அவன் ஜெயிக்கும் ஆதி காலத்து கதை.

இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ஆத்மீகா நடித்திருக்கிறார். அதோடு ராபர்ட், மோனிகா சிவா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். சாம் சிஎஸ் இசையமைத்து லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

ஒரு அழகான குடும்பம் திடீரென நடக்கும் ஒரு விபத்து, அரசு மருத்துவமனையில் அருள் நிதிக்கும் அங்குள்ள ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் பாரதிராஜாவுக்கு போலியான மருந்து போடப்படுகிறது. அதே போல அந்த மருத்துவமனையில் நடக்கும் சில கொலைகளை அவரது குடும்பத்தில் இருக்கும் ஒரு குழந்தை ஒருவர் பார்த்து விடுகிறார். இப்படியொரு நிலையில் அருள்நிதியின் அப்பாவை கொல்ல வில்லன்கள் திட்டம் தீட்டுகின்றனர். இதனையடுத்து பாரதிராஜா பிழைத்தாரா? அருள்நிதி குடும்பத்தை காப்பாற்றினாரா? என்பதே கதை.

 

வாய்பேச முடியாதவராக காது சரியாக கேட்காத கதாபாத்திரத்தில் அருள்நிதி சிறப்பாக நடித்திருக்கிறார். ஆத்மிகா வழக்கமான நாயகி பாத்திரத்தில் வந்து போகிறார். பாரதிராஜாவும் அப்பாவாக அசத்தியுள்ளார்.

முழுப்படமும் வில்லன்களுக்கும் அருள்நிதிக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டமும் சண்டையுமே! என்ன தான் கமர்ஷியல் படமாக இருந்தாலும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் இவ்வளவு சைக்கோவாக காமிப்பது கொடூரம்.


வில்லன்கள் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் ஹீரோ தடுக்கிறார் என்பதை தாண்டி புதிதாக திரைக்கதையில் எதுவுமே இல்லை. மிகவும் தொய்வான திரைக்கதை செண்டிமெண்ட் காட்சிகள் பார்ப்பதற்கு சலிப்பை தருகிறது. வில்லன் கதாபாத்திரத்தில் வரும் அஷ்ரஃப், சுரேஷ், சாந்தன் போன்றவர்கள் மிரட்டலான நடிப்பை தந்திருக்கிறார்கள் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அது காமெடியாக மாறிவிடுகிறது.

சாம் சி எஸ் சீக்கிரம் விழித்து கொள்வது நல்லது எல்லாப்படத்திலும் ஒரே மாதிரியான பின்னணி இசை.கேமரா கச்சிதம். மற்றபடி சொல்ல எதுவும் இல்லை.

துருவும் மிக வழக்கமான கமர்சியல் ஆக்சன் படம்