சொப்பன சுந்தரி திரை விமர்சனம்
இயக்குனர் – எஸ் ஜி சார்லஸ்
நடிகர்கள் – ஐஸ்வர்யா ராஜேஷ் , லக்ஷ்மி ப்ரியா , தீபா ஷங்கர் , கருணாகரன்
ஒளிப்பதிவு – பால முருகன் , ராஜ கோபாலன்
இசை – விஷால் சந்திரசேகர்
தயாரிப்பு – பாலாஜி சுப்பு விவேக் , ரவிச்சந்த்ரன்
அண்ணன் விட்டு சென்ற பின் குடும்பத்தை தனியாளாய் கட்டி காக்கும் பெண்ணின் கதை.
வழக்கமான குடும்பகதைகளில் இருக்கும் முடியாத அம்மா, திருமணமாகாத அக்கா இவர்களை விட்டுவிட்டு தன் வாழ்கையை பார்க்க சென்றுவிடும் ஆண் பிள்ளை, குடும்பத்தை ஒற்றை ஆளாய் நின்று காக்கும் பெண் என்ற வழக்கமான சினிமா கதையாக இருந்தாலும், அதை மாற்றுவது சொப்பன சுந்தரி எனும் கார் தான்.
குடும்பத்தை தாங்கும் பெண்ணாக நடித்து இருக்கும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு பரிசாக ஒரு கார் கிடைக்கிறது. அதை அபகரிக்க நினைக்கிறார் அவரின் சகோதரர், இறுதியில் பல பிரச்சனைகள் கிளம்ப கடைசி சொப்பன சுந்தரி யாரிடம் போய் சேருகிறது என்பது தான் கதை.
மிடில் கிளாஸ் பெண்களின் வாழ்கையை பிரதிபலிப்பதில் கைதேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் இதிலும் அப்படி ஒரு நடிப்பை காட்டி இருக்கிறார். கொஞ்சம் கிரே ஷேடில் வரும் கருணாகரன் நடிப்பு ஈர்க்க வைக்கிறது. லஷ்மி, தீபா, சுனில் ரெட்டி என அனைவரும் தங்கள் பங்கை சரியாக ஆற்றி இருக்கிறார்கள்.
படத்தின் பலமே இசை தான், அஜ்மல் உடைய இசை ஈர்க்க வைக்கிறது.
இவ்வளவு பேரும் உதவி செய்தும் படம் செல்ப் எடுக்காததன் காரணம் வலுவில்லாத திரைக்கதை தான். சாதாரண கதையாக இருந்தாலும், திரைக்கதையில் நிமிர்த்தி உட்கார வைக்கும் வித்தை தெரிந்துவிட்ட அது நம் மனதில் நிறைந்துவிடும். இந்த இயக்குனருக்கு அது தெரியாதது வருத்தமே!!
சொப்பன சுந்தரிக்கு இன்னும் கவனம் கொடுத்து இருக்கலாம்