இயக்கம் – மார்டின் நிர்மல் குமார்
நடிகர்கள் – விமல், அனிதா சம்பத், பால சரவணன்.
தன் தங்கைக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து, கல்யாணம் செய்ய ஆசைப்படும் விமல் அதற்கு தடையாக வரும் பிரச்சனைகள் அதை தாண்டி அண்ணன் என்ன செய்கிறார். களவாணி போல் காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
விமலை மீண்டும் கலகலப்பாக பார்ப்பது ஆசுவாசமாக இருக்கிறது. ஆண்பாவம்,களவாணி மாதிரியான கதைக்களம் கொண்ட படம். ஆனால் திரைக்கதையின் சோர்வில் பாதியே கலகலப்பாக இருக்கிறது.
சின்ன சின்னதா அங்கங்கே சிரிப்பு, ஊடால் பழைய பாணி செண்டிமெண்ட் காட்சிகள், ஆனால் படத்தின் பலம் எங்கும் போரடிக்கவில்லை என்பதே. கொஞ்சம் திரைக்கதையில் மெனக்கெட்டிருந்தால் சுந்தர் சி பாணி கலக்கலான காமெடி படமாக வந்திருக்கும்.
விமல் தன் தங்கச்சி அனிதா சம்பத்தை பெண் பார்க்க வந்த கிழட்டு பண்ணையார்களான நரேனையும் அவர் தம்பியையும் விரட்டி அடிக்கிறார் .கோவமான அவர்கள் அனிதாவுக்கு ஓகே வான மாப்பிள்ளையோடு கல்யாணம் நடக்க இருப்பதை தடுக்க முயற்சி செய்கிறார்கள் ,இதோடு விமல் கனவில் குதிரையில் வந்து குறி சொல்லும் கோடங்கி விமல் தங்கச்சிக்கு கல்யாணம் ஆன இரண்டு நாள்ள புருசனோட மச்சான் செத்துடுவார்னு சொல்லி மறையறாரு ,கோடங்கி விமல் கனவில் வந்து சொன்னவர்கள் எல்லோரும் இறந்த தால் பயந்து போன விமல் பயமும் காமெடியும் கலந்து கலாட்டா செய்து தன் தங்கச்சி கல்யாணத்தை எப்படி நடத்தறாரு ,யாரு சாகறாங்க என்பது தான் படத்தின் கதை .
படத்தில் பல இடங்களில் ஒர்க் ஆகும் காமெடி தீபா சங்கர் பல இடங்களில் எரிச்சல் தருகிறது. விமல் தன் நடிப்பை தந்திருக்கிறார். அனிதா சம்பத் தங்கையா சிறப்பக நடித்திருக்கிறார். இசை, ஒளிப்பதிவு தேவையானதை சரியாக செய்துள்ளது.
தெய்வ மச்சான் மோசமில்லாத நல்ல காமெடிப் படம்