The Pope’s Exorcist – Review

போப்பின் எக்ஸார்சிஸ்ட் அமெரிக்க அமானுஷ்ய திகில் திரைப்படம் ஜூலியஸ் அவேரி இயக்கியுள்ள இப்படத்தில் ரஸ்ஸல் குரோவ் தந்தை கேப்ரியல் அமோர்த் ஆக நடித்திருக்கிறார். இப்படத்தில் டேனியல் சோவாட்டோ , அலெக்ஸ் எஸ்ஸோ மற்றும் ஃபிராங்கோ நீரோ ஆகியோரும் நடித்துள்ளனர் .

1980 களில் வாடிகனில் போப்பாக இருந்து, பல பேய்களை ஓட்டி எக்ஸார்சிசம் செய்தவரின் டைரிக்குறிப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம்.

ரஸ்சல் குரோ நீண்ட இடைவேளைக்குப்பிறகு நடித்திருக்கும் படம்.

தந்தையில்லாத ஒரு குடும்பம் அவர்களது சொந்த ஊரிலிருக்கும் மேன்சனை விற்க ஸ்பெயின் வருகிறது. அந்த வீட்டில் இருக்கும் பேய் சிறுவனைப் பிடித்து கொள்கிறது. வாடிகனை மொத்தமாக அழிக்க நினைக்கும் பேய் போப் கேப்ரியலை அழைக்கிறது அவர் வந்து பேய் ஓட்டினாரா இல்லையா என்பதே படம்.

பேய் படங்களுக்கு உண்டான அத்தனை டெம்ப்ளேட்டும் படத்தில் இருக்கிறது. ஆனால் லாஜிக் இல்லாமல் சத்தம் வைத்து பயமுறுத்துவது, கதவு சாத்துவது, திடீரென திரும்புவது போன்ற கிளிஷேக்கள் இல்லாதது மிகப்பெரிய பலம்.

உண்மையில் நடந்த கதை என்பது படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஒரு பேய் படத்தில் பேயிடம் கூட ஜோக்கடித்து நம்மை சிரிக்க வைக்கும் ரஸ்சல் குரோ நடிப்பு அபாரம். அவர் தான் முழுப்படத்தையும் இழுத்துச் செல்கிறார்.

அந்த சிறு பையன் உண்மையில் மிரட்டியிருக்கிறான். வாடிகனில் உள்ள அரசியலும் படத்தில் வருகிறது. கேமரா இசை இரண்டும் பேய் படத்திற்கான வேலையை சரியாகச் செய்துள்ளது.

ஹாரர் பட ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை தரிசிக்கலாம்.