27
Oct
நீங்கள் தேவர் மகன் பார்த்து விட்டீர்களா? நீங்கள் ‘தளபதி’, பார்த்தாச்சா? நீங்கள் ‘வேட்டையாடு விளையாடு’, கண்டிருக்கீங்களா? அட.. ’பாட்ஷா’ -வை டிவியிலாவது வாட்ச் பண்ணி இருக்கீங்களா? அப்புறம் இந்த ‘சக்தே இந்தியா’, ‘இறுதிச்சுற்று’, ’கென்னடி கிளப்’ போன்ற படங்களில் இருந்து எதையாவது எப்போதாவது கண்டு ஸ்மைல் பண்ணி இருக்கீங்களா?- அப்படின்னா விஜய்- யை வைத்து அட்லீ இயக்கிய பிகில் படம் உங்களுக்கு முழுமையாக பிடிக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் ஒரு சினிமா அதுவும் அட்லி & விஜய் காம்பினேஷன் படம் என்றால் சரவெடியாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் ஆசைப்பட்டால் உங்கள் விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறது இந்த பிகில். இந்தக் கால யூத்களின் ஒருவரான சகல ஆன்லைன் மீடியாக்களையும் அப்டேட்-டாக வாட்ச் பண்ணும் டைரக்டர் அட்லீ இந்த பிகில் என்ற டைட்டிலில் சொல்லி இருக்கும் கதை என்னவென்றால் தாதா ராயப்பன் (விஜய்)நார்த் மெட்ராஸ் தாதா. இவன் அண்மையில் வந்த…
