‘கருப்பங்காட்டு வலசு’ விமர்சனம்

‘கருப்பங்காட்டு வலசு’ விமர்சனம்

சமீபகாலமாக கிராமத்து கதை அதிலும் கிராமத்தைல் க்ரைம் ஸ்டோரி மிக்ஸ் ஆன படம் வரவே இல்லை என்ற குறையைத் தீர்த்திருக்கிறது கருப்பங்காட்டு வலசு படம்..! ஒரு பக்கம் ஹைடெக்காகி வரும் நகரில் கொஞ்சம் கூட அடிப்படை வசதிகளே இல்லாத ஒரு கிராமத்தின் வளர்ச்சி, அங்கு நடக்கும் திருட்டு, அதில் இருந்து மக்களை காப்பாற்ற பொருத்தப்படும் சிசிடிவி கேமரா, அதே கேமராவினால் ஏற்படும் மரணம் என்று நிஜமாகவே ரூம் போட்டு யோசித்து கதை பண்ணி இருப்பதால் சலிப்பை தரவில்லை என்பதே நிஜம்! ‘கருப்பங்காட்டு வலசு’ என்ற டாய்லெட் கூட இல்லாத பக்கா ஓல்ட் வில்லேஜ் அந்த வில்லேஜை சேர்ந்தவராக இருந்தாலும் வெளிநாட்டில் இருந்து வரும் ஊர் தலைவரின் மகளான நீலிமா, தனது கிராமத்தின் நிலை அறிந்து, அங்கு மாற்றத்தைக் கொண்டு வரும் நடவடிக்கையில் இறங்குகிறார். நீலிமாவின் முயற்சியால் சிசிடிவி கேமரா, மாணவர்களுக்கு கனிணி பயிற்சி, கழிப்பிட வசதி உள்ளிட்ட வசதிகள் கிராம மக்களுக்கு…
Read More
பிஸ்கோத் என்ற பெயரில் தீபாவளி சரவெடி!

பிஸ்கோத் என்ற பெயரில் தீபாவளி சரவெடி!

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு 5,43,11,615 என்றும், கொரோனாவால் மரணங்கள் எண்ணிக்கை 13,17,396 என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,78,61,884 என்றும் உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இதில் அதிர்ச்சி என்னவெனில் இது வரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக ஒரே நாளில் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கையாக 6,57,000 பதிவாகி இருப்பதுதான். இந்த புள்ளி விபரங்களால் கவலைப்படுவர்கள் பட்டியலில் நீங்களும் உண்டா? இப்படியான ”கவலைப்படுதலே கடுநரகு, அம்மா கவலையற்றிருத்தலே முக்தி” என்று பாரதி கூறியுள்ளார். நாம் சிரிப்பை மறந்து கவலைப்படும் போது நம்மை அறியாமலே நமக்கு பல விதமான நோய்கள் ஏற்படுகின்றது. கவலையால் தோன்றும் நோய்கள் நரம்பு தளர்ச்சியை உண்டாக்கும் பலத்தை இழக்கச் செய்யும் பலவகை ஏக்கங்களை உண்டாக்கும் மூளைக்கோளாறு இரத்த அழுத்தம் இருதய நோய் மொத்தத்தில் சிரிப்பை மறந்து கவலைப்படுவதால்தான் இவை போன்ற பலவகை நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன.  இந்த திடீர் தோன்றல்…
Read More
கலங்கடிக்கும் க/பெ ரணசிங்கம் – விமர்சனம்

கலங்கடிக்கும் க/பெ ரணசிங்கம் – விமர்சனம்

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குறிப்பாக வறட்சி மாவட்டம் என்று சொல்லப்படும் ராமநாதபுரம் போன்ற ஊரில் உள்ள கூலித்தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் ‘கவர்ச்சி’ கரமான விளம்பரங்களை நம்பி, வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். அப்படி வெளிநாடு போய் பணிபரியும் இடங்களிலோ, அல்லது சாலை விபத்துகளிலோ சிக்கி மரணமடைய நேரிடுகிறது. சிலர் தற்கொலையாகவும், மர்மாகவும் இறக்கின்றனர். இதுபோன்ற சமயங்களில் தமிழகத்தில் வசிக்கும் அவர்களது குடும்பத்தினர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதே சமயம் வெளிநாட்டில் இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நம்மர்கள் எப்படி எல்லாம் படாதபாடுபடுகின்றனர் என்பதை இதுநாள் வரை செய்தி தாள்களில் இரண்டு காலம் செய்தியாகவும், தொலைக்காட்சிகளில் இருநூற்று நாற்பது வார்த்தை ஒலியாகவும் பார்த்து, கேட்டவர்கள் ஒவ்வொருவரையும் உலுக்க வைத்து ஜில்லிட வைக்கும் நிஜக்கதையுடன் திரைக்கு வந்திருக்கும் படம்தான் க/பெ.ரணசிங்கம். அதாவது தண்ணீர் பஞ்சத்துக்கு பேர் போன ராம்நாட்டில் விட்டேத்தியாகச் சுற்றிக் கொண்டிருந்தவர் ஹீரோ விஜய் சேதுபதி. அவரை சீண்டி, நோண்டி, நெருங்கி…
Read More
குடும்பத்தோடு தியேட்டருக்கு போய் பார்க்கத் தகுந்த பட லிஸ்டில் சேர்ந்த ‘காலேஜ் குமார்’ – விமர்சனம்!

குடும்பத்தோடு தியேட்டருக்கு போய் பார்க்கத் தகுந்த பட லிஸ்டில் சேர்ந்த ‘காலேஜ் குமார்’ – விமர்சனம்!

சினிமாவை பொறுத்தவரை ஆவணப்படம் எடுப்பதற்கு ஏகப்பட்ட ஆதார தகவல்களை சேகரிக்க வேண்டும். குடும்பப் படங்களை எடுப்பதற்கு அக்கம் பக்க வீடுகளை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். சண்டைப் படமெடுக்க ஏகப்பட்ட ஹாலிவுட் ஃபைட் படங்களைக் காண வேண்டும். ஆனால் காமெடிப் படமெடுக்க நன்றாகச் சிரிக்க தெரிந்த யூனிட் வேண்டும் .. அப்படியாப்பட்ட குழு இணைந்து வழங்கி இருப்பதுதான் காலேஜ் குமார் படம். இத்தனைக்கும் 2017-ம் வருஷம் கன்னடத்தில் விக்கி வருண், சம்யுக்த ஹெக்டே நடிப்பில் வெளி யாகி பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம்தான் இப்போது ‘காலேஜ் குமார்’ என்ற பெயரில் ரீ மேக் ஆகி வந்துள்ளது. அதிலும் இளையதிலகம் பிரபு நடிப்பில் 225வது திரைப்படமாக வந்துள்ள இதில் ராகுல் விஜய், பிரியா வட்லமணி, பிரபு, மதுபாலா, மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். இன்றைய இளைஞர்களுக்கும், அவர்களைப் புரிந்து கொள்ளாத சில பெற்றோர்களுக்கும் பாடம் எடுப்பதுபோல இந்தச் சமூகத்துக்குத் தேவையான ஒரு சப்ஜெக்ட்டுடன் வந்துள்ளது. அதாவது…
Read More
திரெளபதி படத்தில் என்ன ஸ்பெஷல்?- சிறப்புப் பார்வை!

திரெளபதி படத்தில் என்ன ஸ்பெஷல்?- சிறப்புப் பார்வை!

திருவிழா காலமும் இல்லை, தேர்தல் காலமும் இல்லை, விடுமுறை காலமும் இல்லை ஆனாலும் தியேட்டர்கள் பரபரப்பாக இருக்கிறது. தேர்வு காலம் என்றாலும் ஒவ்வொரு வீட்டின் பெண் பிள்ளைகளையும் அழைத்து கொண்டு தியேட்டர் செல்லும் பெற்றோர்கள். ஒவ்வொரு தியேட்டர்கள் முன்னாலும் விளம்பர பதாகைகள் சுவரொட்டிகள் என பளிச்சிட வைக்கிறது. வசூல் மன்னர்களாக இருக்கும் பெரிய நடிகர்களும் இல்லை, பல வெற்றிப் படங்களை கொடுத்த பெயர் பெற்ற பெரிய இயக்குனரும் இல்லை, பெரிய பெரிய பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமும் இல்லை. இருப்பினும் மேலே சொன்ன அத்தனைக்கும் இணையாக எதிர்பார்ப்பினை உருவாக்கி தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வெளியாகிறது திரௌபதி என்ற திரைப்படம். இந்த படம் உருவான விதம் பலருக்கும், படத்தின் டிரைலர் வரும் வரை தெரியவே தெரியாது. ஏன் இப்படி ஒரு படம் உருவாகி கொண்டிருக்கிறது என்பதே பலருக்கும் தெரிந்திருக்காது. ட்ரெயிலர் வெளியான அன்று தான் தமிழ் திரை உலகம்…
Read More
ஓ மை கடவுளே – விமர்சனம்!

ஓ மை கடவுளே – விமர்சனம்!

டைவோர்ஸ் எனப்படும் விவாகரத்து — இன்று சர்வ சாதாரணமாக சகல தரப்பினரும் சொல்லும் ஒரு வார்த்தையாக, விஷயமாக ஆகி விட்டது. நம் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் 1960 களில் ஜஸ்ட் 0.002% ஆக இருந்த டைவோர்ஸ் அப்ளிகேசன், 1980- ல் 0.03% ஆகி ,1990 -ல் 0.1% ஆகி, 2007 -ல் 1% ஆகி, 2017ல் 7% ஆனது 2019ல் அதனிலிருந்து புள்ளி 4% அதிகரித்துள்ளது.. இச்சூழலில் குடும்ப உறவுகளை பெருமைப்படுத்தி கதை சொல்லி வந்த வெள்ளித் திரை இப்போது ட்ராக் மாறி போய் கொண்டிருக்கிறது. கூடவே வீட்டு மெம்பர்களில் ஒன்றாகி விட்ட வெள்ளித் திரை என்னும் டி வி- சேனல்கள் இந்த டைவோர்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்துக் கொண்டிருக்கிறது. இப்படியாப்பட்ட காலக் கட்டத்தில் நட்பு, காதல், கல்யாணம், குடும்பம் மற்றும் கடவுள் என்பது போன்ற வாழ்வியல் சமாச்சாரங்களைக் கொண்டு ‘ஓ மை கடவுளே’ என்ற பெயரில் 2K ஜெனரேசனுக்காகவே வழங்கி அசத்தி இருக்கிறார்கள்,…
Read More
காதலை காதலிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ‘தொட்டு விடும் தூரம்’

காதலை காதலிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ‘தொட்டு விடும் தூரம்’

இதுநாள்வரை வெளியான சினிமாக்களில் அதிகமான படங்கள் காதலை மையாமாக கொண்டு வந்தவைகள்தான். இந்த ஹைடெக் உலகத்தில் கூட நாம் எதிர்பாராமலே நம்மில் தோன்றும் அபூர்வமான ஒரு விஷயம் தான் காதல். அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவருமிலர். அதனை விரும்பாதவர் யாரும் இல்லை. அன்பு, பாசம் போன்றவைகளுடன் அந்நியப்பட்டு நிற்பதுதான் காதல். ஆணுக்கு ஒரு பெண். பெண்ணுக்கு ஒரு ஆண். பெற்றோரிடம் நாம் செலுத்தும் காதல் என்பது குடிநீரும், கண்ணீரும் போல… இரண்டும் ஒன்று போல் இருந்தாலும், அவை வேறுவேறு தான். ஆனால், ஆணுக்கும் – பெண்ணுக்கும் இடையே உள்ள காதல் என்பது தாகமும் குடிநீரும் போல…ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. இதனால்தான் இந்த காதலை மையமாகக் கொண்டு அடுத்தடுத்து சினிமாக்கள் வருகின்றன். அந்த வரிசையில் வந்திருப்பதுதான் தொட்டு விடும் தூரம் படம். ஆனால் இந்த காதல் (கோட்டை) கதையும் காண்போரை கொஞ்சமாவது கவரும் என்பதுதான் ஸ்பெஷல். காதலுக்கு கண் ஏது என்பது போல்…
Read More
தம்பி – எல்லோருக்கும் பிடிக்கும்!

தம்பி – எல்லோருக்கும் பிடிக்கும்!

தம்பி – இந்த வார்த்தைக்கென தமிழகத்தில் தனி மதிப்புண்டு. சகோதரர்களில் கடைக்குட்டியை மட்டுமே  தம்பி என்பது குறிப்பிட்டாலும் உறவு முறை இல்லாத இளையவர்களை விளிக்க உதவும் சொல்லும் இதுவே. அந்த வகையில் தமிழக அரசியலில் இந்த தம்பி என்று வார்த்தைக் கென தனி மதிப்புண்டு. அதிலும் திராவிட அரசியலில் அமோக வரவேற்பு பெற்ற இந்த தம்பி என்னும் தலைப்பில் குடும்பப் பாசத்தையும், அரசியலையும் சம அளவில் சேர்த்து போதுமான அளவு சமூக பொறுப்பு, அக்கறை, நாட்டு நடப்பு, குரோதம், மோசடி, த்ரில்லிங் போன்ற மசாலாக்களை போட்டு நான் வெஜ் சினிமா ஒன்றை ஜோதிகா & கார்த்தி மற்றும் சத்யராஜ் வழியாக வழங்கி இருக்கிறார் ஜீத்து ஜோசப். அரசியல்வாதியாக காலம் தள்ளும் சத்யராஜ் அவர் மனைவி சீதா. இவர்களின் மகள் ஜோதிகா. மகன் கார்த்தி. இதில் கார்த்தி ஸ்கூல் வயசிலேயே போதைக்கு அடிமையாகி, பிரச்னைக்குள்ளாகி 15 வருடங்களுக்கு முன்பு காணாமல் போய்விடுகிறான். அந்த…
Read More
ஹீரோ – அவசியம் பார்க்க வேண்டியவன்தான்!

ஹீரோ – அவசியம் பார்க்க வேண்டியவன்தான்!

உலக மயமாக்கலுக்குப் பின்னர், எல்லா வகையான செயல்களும் உலகளவில் நிலைப்படுத்தப் பட்டு வருகின்றன. தரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் கல்வித்துறை மட்டும் நமது நாட்டில் பின்தங்கியே இருக்கிறது என்பது வேதனைதான். ஏகப்பட்ட வேறுபாடுகளும், சூழல்களும் நிறைந்த நம் நாட்டில் உள்ள மாநில அரசுகளின் முரண்பட்ட கல்விக்கொள்கைகள் ஒரு விசித்திரமான சூழலையே ஏற்படுத்தியுள்ளது. கலாச்சார மாற்றம் கல்வியோடு இணைந்தே சமுதாயத்திலும் உணவிலிருந்து உடை வரை பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதற்கேற்றவாறு மாணவர் களைத் தயார்படுத்த வேண்டியது கல்வித் துறையில் பெரிய சவாலாக உள்ளது. கற்றுத்தரும் முறைகளில் பழங்கால முறை பொருந்தாத ஒன்றாகும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், தொலைக்காட்சி, கணினியின் வளர்ச்சியும் பயன்பாடெல்லாம் கல்விச் சாலைக்குள் நுழைவதே செய்தியாகும் அளவுக்குத்தான் இருக்கிறது. ஆனாலும் இந்தியாவில் கல்வி கற்றுக் கொடுக்கும் முறைகளில் மாற்றம் வேண்டும் என்று ஏகப்பட்ட பேர்கள் எழுதியும், பேசியும் ஓய்ந்து போன நிலையில் இந்த கல்வி பிரச்னையை வைத்து ஹீரோ என்றொரு சினிமாவே எடுத்து விட்டார்கள்.…
Read More
மிக மிக அவசரம் – ரிவியூ!

மிக மிக அவசரம் – ரிவியூ!

ஒரு சினிமா என்பது சமூகத்திற்கு ஏதாவதொரு நல்லதொரு மெசெஜை கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அறுந்து போன ரீலாகி பல காலமாச்சு. ஆனால் இப்போ ரிலீஸ் ஆகியுள்ள மிக மிக அவசரம் என்றொரு படத்தின் மூலம் போலீஸ் அதிகார வர்க்கத்தின் குரூர போக்கு + நட்புணர்வை வெளிக்காட்டுவதுடன் பெண் போலீசின் அதுவும் கொஞ்சம் அழகான லேடி கான்ஸ்டபிள்களின் அவஸ்தையை சகலருக்கும் புரியும்படியும் எக்ஸ்ட்ராவா ஒரு ஹெல்த் அலெர்-டையும் செய்து இருக்கிறார் புது இயக்குநர் சுரேஷ் காமாட்சி. ஆமாமுங்க.. இந்தப் படத்தின் விமர்சனத்துக்குள் போகும் முன் ஒரு விஷயம்: நம் இதயத்தைப் போலவே ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கும் உறுப்பு, சிறுநீரகம். இது இயங்குவதை நிறுத்தி விட்டால் அவ்வளவுதான். உடலில் உள்ள கெட்ட நீரை மட்டுமல்ல, தேவைக்கு அதிகமான உப்பு, பல்வேறு நச்சுக்கள், அவசியமற்ற மருந்துக்கூறுகள் போன்றவற்றை வெளியேற்றுவதும் சிறு நீரகங்கள்தான். சிறுநீரகத்தை அதிகம் தாக்கும் பிரச்னைகளில் முக்கியமானது, சிறுநீரை அவசியமானபோதும் வெளியேற்றாமல் இருப்பதுதான். வெளியிடங்களில்…
Read More