16
Apr
ஆஹா தமிழ் 100% தமிழ் உள்ளடக்கத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாட்டத்துடன் வரவேற்றது! நடிகர் சிலம்பரசன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத், ஆஹா தமிழ் தளத்தின் பிராண்ட் அம்பாசிட்டர்களாக அறிவிக்கபட்டனர். சென்னை,14 ஏப்ரல்,2022: இந்தியாவின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான ஆஹா, சென்னையில் இன்று தமிழ் தளத்தை துவங்கியுள்ளது. இந்த வெளியீட்டு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஶ்ரீ முத்துவேல் கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆஹா தமிழ் தளத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக நியமனமான நடிகர் சிலம்பரசன் என்கிற சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் அவருடன் இணைந்து விழாவை சிறப்பித்தனர். ஆஹா, தமிழ் புத்தாண்டை ஒட்டி, 100% தமிழ் கொண்டாட்டத்துடன், தமிழ் உள்ளடக்கத்தின் அற்புதமான வரிசையை வெளியிட்டது.இந்நிகழ்வில் பிராண்ட் அம்பாசிட்டர்கள் நடித்த “ தட்டினா தமிழ் மட்டுமே” என்ற விளம்பர படத்தை வெளியிட்டனர். இந்த விளம்பரங்கள் ஒரு பொழுதுபோக்கு அதன் மொழி சார்ந்த மக்களை எப்படி ஒன்றிணைக்கிறது என்பதை காட்டுவதாக அமைந்திருந்தது. தமிழ்…