பாலிவுட் கேமராமேன் டைரக்‌ஷனில் உருவாகும் தமிழ் படம் ‘உன் பார்வையில்’!

‘பிக்பாஸ்’ மூலம் மக்கள் மனங்களில் இடம் பிடித்த நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தற்போது ஒரு ரொமான்ஸ் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கிறார். ‘உன் பார்வையில்’ என்ற இப்படத்தை ‘Kaho na pyar hai’, ‘Pardes’, ‘Taal’ போன்ற பாலிவுட் மெஹா ஹிட் படங்களின் ஒளிப்பதிவாளரான கபிர் லால் இயக்குகிறார். இது தமிழில் இவருக்கு அறிமுகப் படமாகும். இந்த ‘உன் பார்வையில்’ படத்தினை Lovely World Production நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அஜய் சிங் தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் படமாகிறது. தமிழ் பதிப்பில் கணேஷ் வெங்கட்ராமன், பார்வதி நாயர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ரொமான்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் சைக்காலாஜிஸ்ட் ஆகவும், பார்வதி நாயர் பிஸினஸ் உமனாகவும் நடிக்கிறார்கள். படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி அனைவரையும் கவரும்படி அமைந்துள்ளது.

இத்திரைப்படம் பற்றி நடிகர் கணேஷ் வெங்கட்ராம் பேசும்போது, “Kaho na pyar hai’, ‘Pardes’, ‘welcome back’ போன்ற பல படங்களில் கபிர் அவர்கள் ஒளிப்பதிவில் செய்த மேஜிக் கண்டு பிரமித்திருக்கிறேன். அவர் என்னிடம் இந்தப் படத்தின் கதையை சொன்னபோது பரபரப்பான சுவாரஸ்யம் மிகுந்த கதையாக இருந்தது. என் கதாப்பாத்திரம் பல அடுக்குகள் கொண்டதாக இருந்தது. இம்மாதிரியான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கவே இத்தனை நாட்கள் காத்திருந்து போல் தோன்றியது. படம் அழகாக உருவாகி வருகிறது…” என்றார்.

நாயகி பார்வதி நாயர் பேசும்போது, “நடிப்புக்கு சவால் தரும் கதாப்பாத்திரம் என்னுடையது. இந்தப் படத்தில் என் முழு உழைப்பை தந்து நடித்திருக்கிறேன். கணேஷ் வெங்கட்ராம் மிகச் சிறந்த நடிகர். படப்பிடிப்பில் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தார். கபீர் அவர்கள் ஒவ்வொரு காட்சியையும் அமைக்கும்விதமும், அதை படமாக்கும் விதமும் பிரமிப்பானது…” என்றார்.

இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு டேராடூன், உத்ராகண்ட் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

பரபரப்பாக உருவாகி வரும் இப்படத்தினை வரும் ஜூலை மாதம் வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது.