கீர்த்தி சுரேஷு ஆரம்பித்த புதிய பிஸினஸ் !

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையான இருப்பவர் கீர்த்தி சுரேஷ். மலையாள நடிகையான இவர், தற்போது தமிழ், தெலுங்கில் என பலமொழிகளில் பிசியா நடிச்சு வருகிறார். தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், குறுகிய காலத்திலேயே ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

தற்போது ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு நடித்து வரும் அவர், செல்வராகவனுடன் இணைந்து ‘சாணிக் காயிதம்’ படத்திலும், தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரி பாட்டா’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இதையடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள கீர்த்தி சுரேஷ், டொவினோ கதாநாயனாக நடிக்கும் புதிய படத்தை தயாரித்து வருகிறார்.

இதற்கிடையே திரைப்பிரபலங்கள் பலரும் யூடியூப் சேனல் ஆரம்பித்து, தங்களது வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷும் புதிய யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கீர்த்தி சுரேஷ், வீடியோ லிங்க் ஒன்றை இணைந்துள்ளார். யூடியூப் சேனல் ஆரம்பித்துள்ள கீர்த்தி சுரேஷுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.