முழுக்க முழுக்க புதுமுகங்களின் முயற்சியில் மாறுபட்ட களத்தில், திரில்லர் திரைப்படமாக வந்துள்ள படம்அக்காலி.
அறிமுக இயக்குநர் முஹம்மத் ஆசிப் ஹமீது இயக்கத்தில் நாசர், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், அர்ஜய், ஜெயக்குமார், தலைவாசல் விஜய், வினோதினி, யாமினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
PBS ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் யூகேஸ்வரன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கிரி மர்ஃபி ஒளிப்பதிவு செய்ய, அனீஸ் மோகன் இசையமைத்திருக்கிறார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த தொடர் அமானுஷ்ய கொலைகளை பற்றி அந்த காலத்தில் விசாரணையில்இருந்த காவல்துறை அதிகாரி ஜெயக்குமாரிடம் இன்னொரு பெண் அதிகாரியான ஸ்வயம் சித்தா விசாரிப்பதாகதுவங்கும் கதை, அதன் பிறகு அந்த நேரத்தில் அந்த வழக்கில் நடந்த பல அதிர்ச்சியான விஷயங்களைஜெயக்குமார் சொல்ல சொல்ல கதை விரிவடைகிறது. 6 பேர் நரபலி கொடுக்கப்பட, 7வதாக ஒரு பத்திரிக்கைநிருபரும் அங்கு பலி கொடுக்கப்பட்டிருக்கிறார். இதை எல்லாம் ஜானிஸ் என்ற ஒரு இளம் சூனியக்கார பெண்செய்தார் என நினைக்கும் காவல்துறை அதன் ஆணிவேர் வரை சென்று அதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறது. அக்காலி யார்? அடுத்த பலி யார்? இந்த வழக்கின் அம்சங்களை ஆறு ஆண்டுகள் கழித்து அந்த பெண் போலீஸ்ஏன் தெரிந்து கொள்ள முயல்கிறார் என்பதே மீதிக்கதை.
தமிழ் சினிமாவில், ஹாரர் திரில்லர் படங்களை காமெடி பண்ணாமல் சீரியஸாக அணுகும் படங்களே குறைவுதான். அந்த வகையில் இந்தப்படம் வித்தியாசமான களத்தில் ஈர்க்கிறது.
சாத்தான் வழிபாடு பற்றி பேசியிருக்கும் இந்த படம் கிறிஸ்து பிறப்பதற்கு முன் உள்ள வேதங்களைப் பற்றியும்பேசியிருக்கிறது. கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களை மட்டுமே வைத்து கதையின் மீதும், மேக்கிங்கின்மீது நம்பிக்கை வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
ஹாலிவுட்டில் அதிகம் பின்பற்றப்படும் கதை சொல்லல் முறையில் கொஞ்சம் குழப்பாக இருந்தாலும் நல்லமுயற்சி தான்.
இதில் ரசிகர்களுக்கு அறிமுகமில்லாத களம், புரியாமல் போய்விடும் அபாயம் என இன்னொரு மைன்ஸும்இருக்கிறது.
பில்லி, சூனியம், சாத்தான் வழிபாடு, பிளாக் மேஜிக் என படம் முழுக்க அமானுஷ்யமாகவே பயணிக்கிறது. அதற்கேற்ப பிளாக் டோனில் படம் முழுக்க ஒரு வித இருண்ட உலகிற்குள் நம்மை அழைத்து செல்கிறார்கள்.
காவல்துறை அதிகாரியான ஜெயக்குமார் படம் முழுக்க வியாபித்திருக்கிறார், நல்ல பொருத்தமான நடிப்பு. நாசர் ஒரு முக்கிய இடத்தில் வந்து தன் கதாபாத்திரத்தை செய்து விட்டு போகிறார். ஸ்வயம் சித்தா பெரிதாகவேலை இல்லை என்றாலும் ஆபீஸ் ரூமில் விசாரணை செய்து விட்டு போகும் கதாபாத்திரம். வினோத் கிஷன்ஒரு கெஸ்ட் ரோலில் வந்து கதையின் முக்கிய முடிச்சுகளை அவிழ்த்து விட்டு போயிருக்கிறார். மற்றகதாபாத்திரங்களில் நடித்தவர்களும் பொருத்தமாகவே இருக்கிறார்கள்.
கிரி முர்ஃபியின் ஒளிப்பதிவு படத்துக்கு உள்ளேயே நம்மை அழைத்து செல்கிறது. அனீஸ் மோகன் இசை ஒருவித உணர்வை நமக்கு கடத்துகிறது. இயக்குனர் முஹம்மது ஆசிப் ஹமீது ஒரு வித்தியாசமான கதையைசொல்ல முயற்சித்து தொழில்நுட்ப ரீதியில் ஸ்கோர் செய்கிறார். ஆனால் கதையில் பல விஷயங்கள்அனைவருக்கும் புரியும் விதம் இல்லாமல் போனது ரசிகர்களை சில நேரங்களில் படத்துடன் ஒன்ற முடியாமல்செய்கிறது. அத்துடன் படத்தின் நீளமும் பாதகமாக அமைந்திருக்கிறது. சர்ரென செல்கிறது முதல் பாதி, ஆனால் இரண்டாம் பாதி திரும்ப திரும்ப ஒரே காட்சிகள் வருவது போன்ற உணர்வை தந்து ரசிகர்களைகொஞ்சம் விலக வைக்கிறது. ஒரு சில ட்விஸ்டுகள் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாதது மைனஸ்.
ஒரு புதுமையான அனுபவத்தை தர வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார்கள். அதில் பாதி கிணறுதாண்டியிருக்கிறார்கள்.