ராயர் பரம்பரை திரை விமர்சனம்
இயக்கம் – ராம்நாத்
நடிகர்கள் – கிருஷ்ணா, ஆனந்தராஜ், மொடை ராஜேந்தர்
இசை – ராகவேந்திரா
தயாரிப்பு – சின்னசாமி மௌனகுரு
ஒரு கிராமத்தில் காதலர்களுக்கு எதிராக ஒருவர் சங்கம் நடத்தி வருகிறார் , அதில் கதாநாயகன் கிருஷ்ணா உறுப்பினராக இணைகிறார். அதே ஊரில் தாதாவாக இருக்கிறார் ஆனந்த்ராஜ் அவரது மகளை நிச்சய திருமணம் தான் செய்ய வேண்டும் என்று குறிக்கோளோடு இருக்கிறார், ஆனால் அதை மீறி கதாநாயகன் அந்தப் பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்கிறான், இறுதியில் காதலர்கள் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.
காதல் எதிர்ப்பு சங்கத்திற்கு தலைவராக மொட்டை ராஜேந்திரன் இருக்கிறார். இவர்கள் காதலிப்பவர்களை கண்டால் அவர்களை பிரித்து விடுகிறார்கள். அதே ஊரில் தாதாவாக இருக்கிறார் ஆனந்த்ராஜ். இவர் தன் மகள் சரண்யாவிற்கு தான் பார்க்கும் இளைஞனைத் தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்து வருகிறார். ஆனால், ஜோசியக்காரர் மனோபாலா, உங்களது பெண்ணிற்கு நிச்சயம் காதல் திருமணம் தான் நடக்கும் என்று கூறுகிறார். அதனால், தனது மகளை யாரும் காதலிக்காதவாறு பார்த்து வருகிறார். கிருஷ்ணாவும் சரண்யாவும் அடிக்கடி சண்டை போட்டு வருகிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்ட விஷயம் மொட்டை ராஜேந்திரனுக்கு தெரிய வருகிறது. இதன் பின் நடப்பதை மையாமாக வைத்து இரண்டாம் பாதி நாகற்கிறது, முதல் பாதி மிகவும் மெல்ல நகர்கிறது, இரண்டாம் பாதி சற்று காமெடியுடன் கொஞ்சமாய் சிரிக்க வைத்து முடிகிறது,
இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கிருஷ்ணா, காமெடி காட்சிகளில் ஓரளவிற்கு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ஒரு சில இடங்களில் நடிப்பிற்கு நல்ல மெனக்கெடல் போட்டு நடித்துள்ளார். நாயகியாக வரும் சரண்யா தனக்கு கொடுத்த வேலையை செய்து இருக்கிறார், நடிப்பில் பெரிய ஈர்ப்பு இல்லை . மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ் இருவரும் காமெடி செய்து திரைக்கதையை ஓட்ட முயற்சி செய்து இருக்கிறார்கள். ஆனால், பெரிதாக அது எடுபடவில்லை.
முழுக்க காமெடியை நம்பி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராம்நாத். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர் கொஞ்சம் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கலாம். திறமையான நடிகர்களை வைத்து வேலை வாங்கத் தவறி இருக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசையில் 2 பாடல்கள் மட்டுமே ரசிக்கும் வண்ணம் உள்ளது. விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ராயர் பரம்பரை படம் பரம்பரை பரம்பரையாக எடுக்கும் கதையை சுமாராக எடுத்துள்ளனர்.