யானை
இயக்கம் – ஹரி
நடிகர்கள் – அருண் விஜய், சமுத்திரகனி, ப்ரியா பவானி சங்கர்
இராமேஸ்வரம் பெரிய குடும்பம் நாயகன் இளைய தாரத்து மகன், மற்றொரு ஜாதி தலைவர்ருக்கும் இவர்கள் குடும்பத்திற்கும் பிரச்சனை இந்த நிலையில் குடும்பத்திற்குள் பிரச்சனை நிகழ அதை நாயகன் எப்படி எதிர்கொள்கிறான் வில்லனை எப்படி அழிக்கிறான் என்பதே படம்.
தமிழ் சினிமாவில் ஹரி கமர்ஷியல் படங்கள் செய்வதிலும், நாயகர்களை ஆக்சன் ஹீரோவாக குடும்பங்களுக்குள் கொண்டு சேர்ப்பதிலும் கை தேர்ந்தவர். அவரது அனைத்து படங்களுமே கிட்டதட்ட பிளாக்பஸ்டர்.
ஆர்ட் சினிமாவுக்குள் அவர் படங்கள் அடங்காது அடங்கவும் தேவையில்ல்லை. அவரது பாணி கமர்ஷியல். அதில் நம் தினந்தோறும் பார்க்கும் இடங்களின் மனிதர்களை வைத்து திரைக்கதையில் விளையாட்டு காட்டினால் போதும்.
பெரிய செட்டப், உறவுகள், பரபரக்கும் வண்டிகள், நகரம் முழுக்க விரியும் கேமரா, எல்லாம் ஓடிக்கொண்டே இருக்கும் திரைக்கதை, நாயகியுடன் ஊடல் இதெல்லாம் ஹரியின் வழக்கம் எல்லாமும் இதில் இருக்கிறது.
வழக்கமாக ஹரி படங்களில் என்ன எதிர்பார்ப்போமோ அது எல்லாம் இதில் இருக்கிறது. என்ன அவர் தனது வேகமான திரைக்கதையை கொஞ்சம் குறைத்திருக்கிறார். அவரது படங்களில் ஹீரோ எதையாவது விசாரிப்பார் அந்த காட்சிகள் பலமாக இருக்கும். வில்லனுக்கும் ஹீரோவுக்கும் ஆடுபுலி ஆட்டம் இருக்கும் அது இதில் மிஸ்ஸிங்.
அருண் விஜய் முழுமையான ஹரி பட ஹீரோவாக மாறி மிரட்டியிருக்கிறார். ஒரே ஷாட்டில் வரும் சண்டை காட்சியில் மிரட்டியுள்ளார். நடிப்பிலும் குறையில்லை. பிரியா தனக்கு கொடுத்ததை சிறப்பாக செய்துள்ளார். சமுத்திரகனி சில இடங்களில் நடிப்பில் ஈர்க்கிறார்.
வில்லன் கடைசி வரை எதையுமே செய்யவில்லை ஹரி படங்களிலேயே இவர் தான் சோப்ளாங்கி வில்லன்.
கேமரா பிரமண்டமாக இருக்கிறது. ஜீவி முற்றிலும் மாறுபட்டு இசையமைத்துள்ளார்.
பின்பாதி திரைக்கதை தடுமாறுகிறது அதை சரி செய்திருந்தால் இன்னும் சிறப்பான படமாக வந்திருக்கும் ஆனாலும் இந்தப்படம் இப்போதைய தமிழ் சினிமாவுக்கு தேவை.
யானை கண்டிப்பாக பார்க்கலாம்.