03
Jun
முழுக்க முழுக்க புதுமுகங்களின் முயற்சியில் மாறுபட்ட களத்தில், திரில்லர் திரைப்படமாக வந்துள்ள படம்அக்காலி. அறிமுக இயக்குநர் முஹம்மத் ஆசிப் ஹமீது இயக்கத்தில் நாசர், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், அர்ஜய், ஜெயக்குமார், தலைவாசல் விஜய், வினோதினி, யாமினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். PBS ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் யூகேஸ்வரன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கிரி மர்ஃபி ஒளிப்பதிவு செய்ய, அனீஸ் மோகன் இசையமைத்திருக்கிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த தொடர் அமானுஷ்ய கொலைகளை பற்றி அந்த காலத்தில் விசாரணையில்இருந்த காவல்துறை அதிகாரி ஜெயக்குமாரிடம் இன்னொரு பெண் அதிகாரியான ஸ்வயம் சித்தா விசாரிப்பதாகதுவங்கும் கதை, அதன் பிறகு அந்த நேரத்தில் அந்த வழக்கில் நடந்த பல அதிர்ச்சியான விஷயங்களைஜெயக்குமார் சொல்ல சொல்ல கதை விரிவடைகிறது. 6 பேர் நரபலி கொடுக்கப்பட, 7வதாக ஒரு பத்திரிக்கைநிருபரும் அங்கு பலி கொடுக்கப்பட்டிருக்கிறார். இதை எல்லாம் ஜானிஸ் என்ற ஒரு இளம் சூனியக்கார பெண்செய்தார் என நினைக்கும் காவல்துறை…