ஆம்.. இன்னியோட அக்னி நட்சத்திரம் ரிலீஸாகி 35 வருஷங்கள் நிறைவாகி போச்சு
ஒரு படம் என்றால் திரைக்கதையைத் தாண்டி கலர் கலர் செட்கள், குரூப் டான்ஸர்களின் நடனம், மரத்தை சுற்றி டூயட், ஒவ்வொரு ஆளாக வரிசையாக வந்து அடிவாங்கும் வில்லனின் ஆட்கள் போன்ற விஷயங்கள் இடம்பெறவேண்டும் என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. இவை அனைத்தையும் அடியோடு மணிரத்னம் மாற்றினார். சினிமா என்பது வசனத்தைத் தாண்டி காட்சி ரீதியாக சொல்லப்பட வேண்டிய கலை என்பதை தன் படங்களில் அழுத்தமான உணர்த்தினார். ஒவ்வொரு ஃப்ரேமிலும், நடிகர்களின் உடை, பேசும் மாடுலேஷன், லைட்டிங், எடிட்டிங், இசை என டெக்னிக்கல் அம்சங்களில் கூட தன்னுடைய டச் இருக்கும்படி பார்த்துக் கொள்வதுதான் மணிரத்னம் ஸ்டைல். அதில் இன்று வரை வழுவாமல் இருந்து வருகிறார்.
ஆனால் ‘மௌனராகம்’ படத்தை மணிரத்னம் முடிச்சிருந்த நேரம். நெக்ஸ் உருவாக்கமாக ‘அக்னி நட்சத்திரத்தை’ ஆரம்பிச்சு ஃப்ர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங்கையும் முடிச்சுப்புட்டார். இடையில் வந்ததுதான் ‘நாயகன்’ படத்தை இயக்கும் வாய்ப்பு வந்துச்சு. கமல் என்னும் தங்க முட்டை கிடைத்தது. ஆனா இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்குவதில் சிரமம் இருந்ததால், அக்னி நட்சத்திரத்தை ஒத்திப் போட்டு விட்டு ‘நாயகனில்’ கவனம் செலுத்தினார். நாயகன் முடிந்தவுடன், அதாவது ஏறத்தாழ ஒரு வருடத்திற்குப் பிறகு ‘அக்னி நட்சத்திரத்தை’ மீண்டும் கையில் எடுத்து உருவாக்கி முடிச்சார். மணிரத்னம், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட மகத்தான கூட்டணி, இளைய தலைமுறைக்கு ஏற்றவாறான ஒரு திரைப்படத்தைப் புத்துணர்ச்சி குறையாமல் தந்திருந்தது.
முன்னொரு சொன்னது போல் சொன்னபடி மணிரத்னம் இயக்கிய படங்களிலேயே கதையம்சம் குறைவாக இருக்கிற படம் இது. மிகச் சிறந்த பாடல்கள், நேர்த்தியான ஒளிப்பதிவு, சுவாரஸ்யமாக அடுக்கப்பட்ட காட்சிகள், துள்ளலான நடனங்கள், வசனங்கள் போன்றவற்றின் மூலம் ஒரு நல்ல எண்டெயிர்டெயின் மெண்ட் படமா தந்திருந்தார் மணிரத்னம். அது கமர்ஷியல் சினிமாவாகவே இருந்தாலும் கூட அதன் தரத்திற்கு எக்கச்சக்கமா மெனக்கெட வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஒரு நல்ல உதாரணம்.
தல, தளபதி அளவிற்கு இல்லாட்டாலும் அந்த 80களில் இருதுருவ நடிகர்களின் வரிசையில் கார்த்திக் – பிரபுவும் இருந்தாய்ங்க. ரெண்டு பேருமே ‘பிரபல நடிகரின் மகன்’ என்கிற விசிட்டிங் கார்டைக் காட்டி சினிமாவிற்குள் வந்துவிட்டாலும் தங்களின் தனித்தன்மை மற்றும் திறமை காரணமாக நீடிச்சு நின்னாய்ங்க. அசிஸ்டென்ட் கமிஷனர் என்கிற ஃபிட் லுக்கில் புஷ்டியான பிரபுவைப் பொருத்திப் பார்ப்பது சற்று கடினமான காரியமாக இருந்தாலும், தனது கம்பீரமான நடிப்பால் அதை பேலன்ஸ் செய்திருப்பார். பெரும்பாலும் கார்த்திக்கை முறைத்துக் கொண்டே இருப்பதில் இவரது நேரம் கழிவதே கூட ரசிக்க வைக்கும்,. அமலாவிடமும் அதே மாதிரி இருக்க எப்படித்தான் மனது வந்ததோ?! கார்த்திக்கை ஜாமீனில் எடுக்க, தன் சொந்த அம்மாவே வந்து நிற்கும் போது, அவரை முறைத்துப் பார்த்துக் கொண்டே கையெழுத்து வாங்கும் காட்சி, பிரபுவின் சிறந்த நடிப்பிற்கு ஓர் உதாரணம்.
மணி படத்தில் ஆக்ஷன், சென்டிமெண்ட், ரொமான்ஸ் என பல ஜனரஞ்சக விஷயங்கள் இடம்பெற்றிருந்தாலும், அவற்றையெல்லாம் ஒரங்கட்டிவிட்டு ஜனகராஜின் அந்த ஒற்றை வாசனமான “என் பொண்டாட்டி ஊருக்கு போயிருச்சு” நல்ல ரீச் ஆகி இன்று வரையிலும் பேசப்படுது.
இசை ஆல்பம் என்பதைப் பொறுத்தவரை மணிரத்னம் + இளையராஜா ஜோடி எப்போதுமே ஸ்பெஷல்தான். கேரண்டியா ‘ஹிட்’ ஆகக்கூடிய பாடல்களை எதிர்பார்க்கலாம். இதற்கு ‘அக்னி நட்சத்திரத்தின்’ பாடல்களும் விதிவிலக்கல்ல. பாடல்கள் சிறப்பாக அமைந்ததைப் போலவே அதைக் காட்சிப்படுத்துவதிலும் மணிரத்னம் நிறைய மெனக்கெடுவார் என்பதற்கு இந்தப் படமும் ஓர் உதாரணம். ‘ராஜாதி ராஜன் இந்த ராஜா’ என்கிற அட்டகாசமான பாடல்,- அந்தப் பாடலில் ஒரு சிறப்பம்சம் உண்டு.என்னவென்றால் அதில் கம்பி வாத்தியங்களே கிடையாது. அவற்றை உபயோகிக்காமல் பாடலுக்கு இசை அமைத்திருப்பார் இளையராஜா. உற்று கவனிச்சால் இது உங்களுக்குத் தெரியவரும். அம்புட்டு அற்புதமான இசை. அதே போல படத்தின் பின்னணி இசையிலும் வித்தியாசம் காட்டியிருப்பார் ராஜா. பின்னணி இசை முழுக்க முழுக்க ட்ரம்மிங் மற்றும் ஹம்மிங் தான். ஒரு ரயில்வே ஸ்டேஷனில் ரகளையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். நடனம் ஆடுபவர்களில் சிலர் வரவில்லையென்பதால் தன் மகனை ஆட வைத்திருந்தார் சுந்தரம் மாஸ்டர். எனவே இந்தப் பாடலில் பிரபுதேவா நடனமாடுவதைக் காணலாம்
இன்னொரு ஸ்பெஷல் அதன் கேமராமேன் ஒர்க். அதுவரை தமிழ் சினிமாவில் பதிவாகிக் கொண்டிருந்த மரபான ஒளிப்பதிவு பாணியை பி.சி.ஸ்ரீராமின் புத்துணர்ச்சியும் பரிசோதனை முயற்சியும் உடைத்துப் போட்டது எனலாம். வீட்டிற்குள் நுழையும் மதிய வெயில் வெளிச்சத்தில், எவர்சில்வர் குடத்தை வைத்தால் எப்படி அது வீடு முழுக்க எதிரொலிக்குமோ, அப்படியான லைட்டிங்கை சில காட்சிகளில் பயன்படுத்தியிருந்தார் ஸ்ரீராம். இந்த மாதிரியான பரிசோதனைகள், படத்திற்குப் புதுவிதமான நிறத்தைக் கொடுத்து மிரட்டி இருப்பார்.. மேலும் ஸ்ட்ரோப் ஒளியமைப்பு (Strobes Lighting) எனப்படும் லைட்டுகள் பிளாஷாக மின்னும் விதமாக படமாக்கியிருப்பார் மணிரத்னம். லைட்டுகள் ப்ளாஷ் ஆவதும் ஆஃப் ஆவதுமாக இருக்க, அதிரடியாக சண்டையிட்டு எதிரிகளிடமிருந்து தந்தையை பிரபு மற்றும் கார்த்திக் ஆகியோர் காப்பாற்றும் விதமாக இந்த காட்சி அமைந்திருக்கும். சுமார் 10 நிமிடம் வரை ஓடக்கூடிய, இந்த காட்சிகள் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தந்தன. படத்தின் முக்கியத்துவமான அந்த காட்சியை நிலை
அந்த காலகட்டத்தில் மணிரத்னத்தின் சிறந்த மாஸ் மசாலா படமாக அமைந்திருந்த அக்னி நட்சத்திரம், தமிழ் புத்தாண்டு வெளியீடாக ஏப்ரல் 15, 1988இல் வெளியாகி சுமார் 200 நாள்களுக்கு மேல் பல திரையரங்குகளில் ஓடியது. அத்தோடு இல்லாமல் இரண்டு பிலிம்பேர், மூன்று தமிழ்நாடு அரசின் விருதுகளையும் வென்றது. இந்த படம் வன்ஷ் என்ற பெயரில் இந்தியில் ரீமேக்கப்பட்டு பாலிவுட்டிலும் வெற்றி கண்டது.. மணிரத்னத்தின் மாஸ் மசாலா படமாக இன்றளவும் இருந்து வரும் அக்னி நட்சத்திரம் வெளியாகி இன்றுடன் 36 ஆண்டுகள் ஆவதை இட்டி சினிமா பிரஸ் கிளப்-பில் இருந்து சுட்ட சேதியை நம் ஆந்தை சினிமா அப்டேட்ஸ் குழு நண்பர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி
®️✍️ கட்டிங் கண்ணையா