36 ஆண்டுகளை கடந்த அக்னி நட்சத்திரம்!

36 ஆண்டுகளை கடந்த அக்னி நட்சத்திரம்!

ஆம்.. இன்னியோட அக்னி நட்சத்திரம் ரிலீஸாகி 35 வருஷங்கள் நிறைவாகி போச்சு ஒரு படம் என்றால் திரைக்கதையைத் தாண்டி கலர் கலர் செட்கள், குரூப் டான்ஸர்களின் நடனம், மரத்தை சுற்றி டூயட், ஒவ்வொரு ஆளாக வரிசையாக வந்து அடிவாங்கும் வில்லனின் ஆட்கள் போன்ற விஷயங்கள் இடம்பெறவேண்டும் என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. இவை அனைத்தையும் அடியோடு மணிரத்னம் மாற்றினார். சினிமா என்பது வசனத்தைத் தாண்டி காட்சி ரீதியாக சொல்லப்பட வேண்டிய கலை என்பதை தன் படங்களில் அழுத்தமான உணர்த்தினார். ஒவ்வொரு ஃப்ரேமிலும், நடிகர்களின் உடை, பேசும் மாடுலேஷன், லைட்டிங், எடிட்டிங், இசை என டெக்னிக்கல் அம்சங்களில் கூட தன்னுடைய டச் இருக்கும்படி பார்த்துக் கொள்வதுதான் மணிரத்னம் ஸ்டைல். அதில் இன்று வரை வழுவாமல் இருந்து வருகிறார். ஆனால் ‘மௌனராகம்’ படத்தை மணிரத்னம் முடிச்சிருந்த நேரம். நெக்ஸ் உருவாக்கமாக ‘அக்னி நட்சத்திரத்தை’ ஆரம்பிச்சு ஃப்ர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங்கையும் முடிச்சுப்புட்டார். இடையில் வந்ததுதான்…
Read More
நடிகர் திலகம் சிவாஜிக்கே ஸ்பெஷலான படம் ’வியட்நாம் வீடு’ ! ஏன் தெரியுமா?

நடிகர் திலகம் சிவாஜிக்கே ஸ்பெஷலான படம் ’வியட்நாம் வீடு’ ! ஏன் தெரியுமா?

கவிதையோ, கதையோ அல்லது நகைச்சுவை என்றால் கூட மறக்க முடியாத கேரக்டர் கள் இருப்பது போல் சினிமாவிலும் நிறையவே உண்டு. பல சினிமாக்களில் சம்பந்தப் பட்ட நடிகர் - நடிகைகள், அந்தக் கேரக்டராகவே வாழ்ந்து நம்மை பிரமிக்க வைத்திருப் பார்கள். அப்படி, திரையுலகில் நம் கண்முன்னே ஆதர்ஷ தம்பதியாக வாழ்ந்து காட்டியவர்கள் சிவாஜியும் பத்மினியும். அந்தப் படத்தில் சிவாஜி தெரியமாட்டார். பத்மினியைப் பார்க்கமுடியாது. பிரஸ்டீஜ் பத்மநாபனும் சாவித்திரியும்தான் தெரிவார்கள்; ஒளிர்வார்கள். அந்தப் படம்... 'வியட்நாம் வீடு’. சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இப்படம், நடிகர் திலகத்தின் உணர்ச்சிபூர்வமான நடிப்பைக்கொண்ட படங்களில் கண்டிப்பாக இடம் பெறுவது. ஏற்கெனவே விடிவெள்ளி (பிரபுராம் பிக்சர்ஸ்), பாசமலர், குங்குமம் (ராஜாமணி பிக்சர்ஸ்), புதிய பறவை (சிவாஜி பிலிம்ஸ்), அன்னை இல்லம் (கமலா பிக்சர்ஸ்), தெய்வமகன் (சாந்தி பிலிம்ஸ்) போன்ற படங்கள் சொந்தப்படமாக இருந்தபோதிலும் 'சிவாஜி புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு முதல் படமாக தயாரிக்கப் பட்டது.…
Read More
சிவாஜி மணி மண்டப விழாவில் முதல்வர் கலந்துக்கணும்! – பிரபு வேண்டுகோள்!

சிவாஜி மணி மண்டப விழாவில் முதல்வர் கலந்துக்கணும்! – பிரபு வேண்டுகோள்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு மண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்க வேண்டும் என்பதே அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களின் விருப்பம் என்றும், இந்த விஷயத்தில் சாதகமான பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் நடிகர் பிரபு கூறியுள்ளார். இது தொடர்பாக சிவாஜி குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் சார்பில் அவர் மாநில தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சருக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு:- அப்பாவின் (சிவாஜி) நினைவு மண்டபம் என்பது மறைந்த முதல மைச்சர் ஜெயலலிதாவின் மிகப் பெரிய கனவு திட்டமாகும். அவர் உயிரோடு இருந்திருந்தால் திறப்பு விழாவுக்கு தலைமை வகித்து  சகாப்தம் படைத்த எங்களது தந்தை நடிகர் திலகத்தின் ஆன்மாவுக்கு திருப்தி அளித்திருப்பார். நாங்களும் மகிழ்ச்சியடைந்திருப்போம். ஆனால் மிகப்பெரிய நடிகரின் நினைவு மண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்கவில்லை என்பதை அறிந்து நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். திரைப்படங்கள் மூலம் தமிழுக்கும் தமிழ் கலாச்சாரத்துக்கும் அவர் மிகப்…
Read More