Latest Posts

MX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்”

இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை மையப்படுத்திய, உணர்வுபூர்வமான இந்த தொடரை இயக்கியுள்ளனர். அதீதமான சண்டை காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான கதையமைப்பு உள்ள...

விஜய்மில்டனின் ’கோலி சோடா’! – கொஞ்சம் பிளாஷ் பேக் ரிப்போர்ட்!

பெரிய நட்சத்திரங்கள், நம்பர் ஒன் தொழில்நுட்பக் கலைஞர்கள் யாருமில்லாத கோலி சோடா படத்தின் பட்ஜெட் ரூ 2.5 கோடிதான். விஜய் மில்டன் இயக்கிய இந்தப் படம் ரூ 15 கோடி வரை சம்பாதித்துக்...

வெள்ளை யானை – டிரைலர்!

https://www.youtube.com/watch?v=HM-Gtzpx7ao&feature=youtu.be

விமர்சனங்களை அடக்கி வாசிங்க -கபடதாரி இசை வெளியீட்டு விழா சுவாரஸ்யம்!

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ் செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி...

தயாரிப்பாளர்கள் சங்கம் பலப்படுத்தப்படும்: நிரந்தர வருவாய் உருவாக்கப்படும் – ராமசாமி முரளி!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமிமுரளி தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரண்டைத் தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஓயாத அலைகள் அணி, முன்னேற்ற அணி சார்பில் பலர்போட்டியிட்டாலும் தேர்தல் களத்தில்” தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி” மட்டுமே தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. .இந்த அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தேனாண்டாள் ராமசாமி என்கிற முரளியுடன்தேர்தல்கள நிலவரம் பற்றி ஒரு நேர்காணல்.

என்னென்ன வாக்குறுதிகளை முன்வைத்து தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்.?

தமிழ்த்திரையுலகில் இப்போதைய முக்கிய சிக்கலாக இருப்பதுVPF கட்டணம். அதைக் கட்ட மாட்டோம் என்றும் அதற்குரிய மாற்று ஏற்பாடுகளைசெய்வதற்கான முயற்சியை எங்கள் அணி வெற்றி பெற்றால் செய்வோம். நவீன தொழில் நுட்பங்கள் காரணமாக தமிழ்த் திரையுலகம் சந்திக்கும் சிக்கல்களை சரி செய்து அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கச் செய்வதே எங்களது முக்கிய பணியாக இருக்கும்

மேலும் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த விரும்பும் தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியம்  வழங்கும் திட்டத்தை, தொகையை அதிகரித்து மீண்டும் செயல்படுத்துவோம். சிறிய படங்களையும் OTTயில் வெளியிட முயற்சி எடுப்பது.சிறு படங்களுக்கும் போதிய திரையரங்குகள் ஒதுக்கீடு உறுதி செய்தல் உட்பட பல வாக்குறுதிகளை முன் வைத்துத் தேர்தலில் போட்டியிடுகிறோம்.

.தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிதி இருப்பு எதுவும் இல்லை என்கிற நிலையில் ஓய்வூதியம், அன்பு தொகை எப்படி சாத்தியம்?

எல்லோரும் இதைத்தான் கேட்கின்றனர் சாத்தியம் இல்லை என்பதை சாத்தியம் ஆக்கி காட்டும் செயல்திறன் எங்கள் அணிக்கு உள்ளது தேர்தல் வெற்றிக்கு பின் அனைத்து தரப்பினருடனும் இணைந்து நிதி ஆதாரத்தை உயர்த்துவோம்

தொழில்நுட்பச் சிக்கல் என்று OTTயை குறிப்பிடுகிறீர்கள். அதேசமயம் சிறிய படங்களையும் OTTயில் வெளியிட முயல்வோம் என்று சொல்கிறீர்களே?

திரையரங்குகள் ஒதுக்கீடு போல OTTயிலும் பெரிய படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப் படுகிறது. அதனால் சிறிய படங்களையும் OTTயில் வெளியிட முயல்வோம் என்று சொல்கிறோம்.

சிறிய படங்களுக்குப் போதிய திரையரங்குகள் என்னும் வாக்குறுதி பல தேர்தல்களில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறதே? செயலுக்கு வந்தபாடில்லையே?

விஷால் தேர்தலில் வென்றபோதும் இப்படிச் சொன்னார். ஆனால் அவரால் இரண்டு சங்கங்களின் பொறுப்புகளை வைத்துக் கொண்டு இரண்டிலும் முழுமையாக செயல்பட முடியவில்லை.

சிறு படங்களுக்கு போதிய திரையரங்குகள் என்பது விஷாலுக்கு முன்பும் தேர்தல்களில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும் விசயமாக இருக்கிறதே?

ஆமாம், ஒவ்வொரு முறை தலைவராக வருகிறவர்களும் அதற்காக உரிய முயற்சிகள் எடுக்காமல் விட்டுவிட்டார்கள்.சிறு படங்களை மட்டுமே தயாரித்து வெளியிட்டு வந்த என் தந்தை இராமநாராயணனுக்கும், அவரிடம் சினிமா தொழில் கற்ற எனக்கும்அதன் வலி முழுமையாகத் தெரியும் அதனால் இந்த முறைஉறுதியானமுடிவுஎடுத்து
செயல்படுத்துவோம்

எதிரணியில் போட்டியிடும் டி.ராஜேந்தர் மற்றும் மன்னன் ஆகியோர் விநியோகஸ்தர் சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறார்களே?

இப்படி டி.ராஜேந்தர் போட்டியிடுவது ஏற்க்கத்தக்கது இல்லைஏற்கெனவே விஷால் தலைவரான போது அவரே இந்த காரணத்தைச் சொல்லி நடிகர் விஷாலை விமர்சனம் செய்தார். இப்போது அவரே அப்படிச் செய்கிறார். அவருடைய மகன் சிம்புவால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டி.ராஜேந்தர் பொறுப்புக்கு வந்தால் என்ன செய்வார்? அது மட்டுமின்றி விநியோகஸ்தர் சங்கப் பொறுப்பிலிருப்பவர்கள் வேறு அமைப்புகளில் பொறுப்பு வகிக்கக்கூடாது என்கிற சட்டத்தைத் திருத்தி அதற்கு பொதுக் குழுவில் ஒப்புதல் பெறாமலேயே இங்கே போட்டியிடுகிறார்கள். இது அவருக்குப் தேர்தலில் பின்னடைவையே ஏற்படுத்தும். இப்படிப் பல சிக்கல்களை வைத்துக் கொண்டு அவர் போட்டியிடுவது வருந்தத் தக்கது.

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் ஆட்சியிலிருப்பவர் களைச் சந்தித்து அதிகாரத்துக்கு நெருக்கமாக இருப்பது போல் காட்டிக் கொள்வது சரியா?

எங்கள் சங்கத்தைப் பொறுத்தவரை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர் களோடு இணக்கமாக நடந்துகொள்வது எப்போதும் இருக்கும் வழக்கம்தான். எங்கள் அணியில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிடுகிறார்கள். அரசியல் என்பது வெளியில்தான் இங்கே எல்லோரும் தயாரிப்பாளர்கள்தான்.

நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் புதிதாகஅமைந்திருக்கிறதே?

அப்படி ஒரு சங்கம் அமைவதற்குக் காரணம் இருந்தது. அரசாங்கம் சங்கத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டு ஒரு நிர்வாகக் கமிட்டி அமைத்தது. அதனால் பல சிக்கல்களில் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனாலேயே அந்தச் சங்கம் உருவானது.நாங்கள் வென்ற பிறகு அவர்களுடன் பேசி தாய்ச்சங்கத்தில் இணைய வைத்து ஒன்றுபட்டு செயல்படுவோம்

இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதே?

கொரோனா நேரத்தில் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் அவரவர் சக்திக்குட்பட்டு உதவி செய்தோம். ஆனால் இப்போது எங்கள் அணி சார்பாக வாக்குக்காக யாருக்கும் எந்தப்பணமோ, பொருளோ கொடுக்கப்படவில்லை.

உங்களிடம் குறிப்பிட்ட அளவு ஓட்டுகள் இருக்கின்றன. நீங்கள் சொல்லும் வேட்பாளர் களுக்கு அவர்கள் ஓட்டுப்போடுவார்கள் என்று சொல்லப்படுவது பற்றி..?

மறைந்த என் தந்தை இராமநாராயணன் எளிமையானவர். எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகியவர் அவர் தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்பில் இருந்தபோது அறிமுகப் படுத்தப்பட்டது ஓய்வூதியம், அன்புத்தொகை என்பது சிறு பட தயாரிப்பாளர்கள் வளர்ச்சிக்காக சிறப்பு கவனம் செலுத்தினார். யாருக்கு சிக்கல் என்றாலும் அவராலானஉதவிகளை செய்திருக்கிறார். அதனால் எல்லோரும் அவர் மீது பாசமாக இருந்தார்கள், அது இப்போது எனக்கு ஆதரவாக மாறியிருக்கிறதுஇதைத்தான் அப்படிச் சொல்கிறார்கள்.

பிலிம் சேம்பர் வளாகத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பயன்பாட்டுக்காக 10,000 ம் ச.அடி உங்கள் தந்தை தலைவராக இருந்தபோது வழங்குவதாக சேம்பர் நிர்வாகத்தால் உறுதியளிக்கப்பட்டது அது பற்றி என்ற போது பிலிம்சேம்பர் கட்டிடம் கட்டுவதற்கு எனது தந்தை இராமநாராயணன் சங்கத்தின் தலைவராக இருந்தபோது நிர்வாக ரீதியாக பல்வேறு உதவிகளை செய்துள்ளார். கட்டிட பணிகள் தற்போதுதான் நிறைவடைந்துள்ளது எங்களது அணி வெற்றி பெற்று பதவி ஏற்றவுடன் முதன்மை பணியாக பிலிம்சேம்பர் நிர்வாகத்துடன் பேசி சங்க பயன்பாட்டுக்காக 10,000ம் ச.அடி இடத்தை பெறுவோம்.

சங்க அலுவலக பயன்பாட்டுக்கு போக எஞ்சியுள்ள இடத்தை சினிமா துறைசார்ந்து வணிக பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படும் அதன் மூலம் சங்கத்துக்கு மாதந் தோறும் நிரந்தர வருவாய் கிடைக்க திட்டமிட்டு செயல்படுத்தப்படும்

Latest Posts

MX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்”

இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை மையப்படுத்திய, உணர்வுபூர்வமான இந்த தொடரை இயக்கியுள்ளனர். அதீதமான சண்டை காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான கதையமைப்பு உள்ள...

விஜய்மில்டனின் ’கோலி சோடா’! – கொஞ்சம் பிளாஷ் பேக் ரிப்போர்ட்!

பெரிய நட்சத்திரங்கள், நம்பர் ஒன் தொழில்நுட்பக் கலைஞர்கள் யாருமில்லாத கோலி சோடா படத்தின் பட்ஜெட் ரூ 2.5 கோடிதான். விஜய் மில்டன் இயக்கிய இந்தப் படம் ரூ 15 கோடி வரை சம்பாதித்துக்...

வெள்ளை யானை – டிரைலர்!

https://www.youtube.com/watch?v=HM-Gtzpx7ao&feature=youtu.be

விமர்சனங்களை அடக்கி வாசிங்க -கபடதாரி இசை வெளியீட்டு விழா சுவாரஸ்யம்!

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ் செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி...

Don't Miss

தனுஷ் நடிக்கும் டி43 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி விட்டது!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. டி43 என்றழைக்கப்படும் படம். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. தனுஷின் 43 வது படம் என்பதால் டி43...

தைப் பூச பண்டிகை திருநாளில் ரிலீஸாகும் ‘கபடதாரி’!

கிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் லலிதா தனஞ்செயன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கபடதாரி’. இந்தப் படத்தில் சிபிராஜ் நாயகனாகவும், நந்திதா ஸ்வேதா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.சதிஷ்...

என் கேரக்டருக்காக டெய்லி ஒன்றரை மணி நேரம் மேக் அப்- கேஜிப் 2 குறித்து சஞ்சய்தத்!

வில்லன் பாத்திரம் பிடிக்கும் என்பதால் ஆதிரா ரோலில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று நடிகர் சஞ்சய் தத் விளக்கமளித்துள்ளார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன் உள்ளிட்ட...

‘எக்கோ’வில் ஸ்ரீகாந்துடன் ஜோடி சேர்ந்த ‘விஜய் தேவரகொண்டா’ நாயகி!

ஸ்ரீகாந்த், ஆசிஷ் வித்யார்த்தி, ஸ்ரீநாத், கும்கி அஸ்வின் மற்றும் கதாநாயகியாக வித்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'எக்கோ'. இப் படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர்.ராஜசேகர், ஹாரூன்...

நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு – இயக்குநர் சுசீந்திரன்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது: படத்தொகுப்பாளர் ஆண்டனி :இதே மாதிரி போய்கிட்டே இருக்க வேண்டும் என்று ஆசை. படம் ரொம்ப நன்றாக வந்து...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.