15
Jan
கார்த்தி நடிப்பில் உருவான வா வாத்தியார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மாசிலா என்கிற ஊரில், தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக இருக்கும் தாத்தா (ராஜ்கிரண்). எம்ஜிஆர் மறைந்த அதே நாளில் பேரன் பிறக்க, “வாத்தியாரைப் போல இவனை வளர்க்க வேண்டும்” என்கிற ஆசையில் கார்த்தியை வளர்க்கிறார். எம்ஜிஆர் காட்டிய நல்வழியில் கார்த்தி நடந்தாரா? இல்லையா? என்பதே ஒன்லைன் கதை. இதை கொஞ்சம் விரிவாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசாமி. சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களால் தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநராகப் பெயரெடுத்த நலன், வா வாத்தியார் படத்தில் என்ன சொல்லியிருக்கிறார்… எப்படி சொல்லியிருக்கிறார்… என ஒவ்வொரு காட்சியாக எதிர்பார்த்து பார்த்தால், “கதையும் இல்ல… ஒன்னும் இல்ல” என்பதே இறுதியில் புரிகிறது. நலன் குமாரசாமியிடமிருந்து சற்றும் எதிர்பார்க்காத ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஆரம்பக் காட்சிகள் ஓரளவு ஆர்வம் கூட்டினாலும், அதன் பின் தொடர்ந்து வரும் காட்சிகள்…
