ரணம் திரில்லரில் கலக்கியதா ?

 

இயக்கம் : ஷெரிஃப்

தயாரிப்பு : மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸ்

நடிகர்கள் : வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ்வதி மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர்.

 

நடிகர் வைபவ் நடித்திருக்கும் 25 வது திரைப்படம் ‘ரணம் அறம் தவறேல்’. பொதுவாக வைபவ் காமெடி, காதல் படங்கள் மட்டுமே நடிப்பார் ஆனால் அதிலிருந்து மாறுபட்டு

அவருடைய திரையுலக பயணத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்குடன், ஃபேசியல் ரீகன்ஸ்ட்ரக்சன் ஆர்ட்டிஸ்ட் எனும் அரிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முதல் கிரைம் திரில்லர் படம் ரணம்.

தனது காதல் மனைவியுடன் காரில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தினால், தனது மனைவியை பறிகொடுத்து விடுகிறார். அவருக்கும், 2 வருட நினைவுகள் அழிந்து போகின்றன.

இதனால் வாழ்க்கையை வெறுத்து விரக்தியில் வாழ்ந்து வருகிறார் வைபவ். இப்படியாக செல்லும் வாழ்க்கையில், வைபவ் கையில் ஒரு வழக்கு வருகிறது.

வெவ்வேறு இடங்களில் கை, கால்கள், முகம், உடல் என கருகிய நிலையில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கும் இன்ஸ்பெக்டரும் காணாமல் போக, வழக்கு சூடு பிடிக்கிறது. வைபவ் உதவியுடன் போலீஸ் எப்படி கண்டுபிடிக்கிறது என்பது தான் கதை.


நெக்ரோபிலியாக் ஃபேசியல் ரீகண்ட்ஸ்டரக்டிங்க், என பல அறிவியல் சமாச்சாரங்கள் படத்தில் வருகிறது.

படத்தின் கதை லீனியராக இருந்தாலும் ப்ளாஷ்பேக் பகுதிகள் வைபவின் முன் கதை என எல்லாம் கொஞ்சம் குழப்பமாக இழுக்கிறது

வைபவுக்கு திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத மாறுபட்ட பாத்திரம். கொஞ்சம் நரையுடன் சோகத்தில் இருக்கும் இளைஞன். கொலைகளின் பின்னணியை கண்டுபிடித்து தருபவராக வருகிறார். எமோஷன்ஸ், காதல், அப்பாவித்தனம் என பல கோணங்களில் நடித்திருக்கிறார்.

தன்யா ஹோப் இன்ஸ்பெக்டராக வருகிறார். எல்லாக்காட்சிகளுக்கும் ஒரே மாதிரியான முகபாவம். நந்த்திதா தான் படத்திற்கு மிக முக்கிய பலமாக இருக்கிறார். மகளுக்காக நியாயம் கேட்டு ஏங்கும் இடத்தில் கலக்கியிருக்கிறார்.

படம் முழுக்க வரும் சுரேஷ் சக்ரவர்த்தியும் கவர்க்கிறார் ஆனால் ஏனோ அவருக்கு வேறொருவர் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

அரோல் கரோலியின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக நிற்கிறது. பாலாஜி கே ராஜாவின் ஒளிப்பதிவு படத்தில் கூடுதல் கவனம் பெறுகிறது.

வழக்கமான் திரில்லராக இல்லாமல் திருப்பங்களுக்காக கடினமாக உழைத்திருப்பது தெரிகிறது அதற்காக இயக்குநரைப் பாராட்டலாம். ஆனால் மேக்கிங்கில் ஏதோ ஒன்று குறைகிறது.

எதிரபாரா டிவிஸ்ட் ஓகே ஆனால் இத்தனை நீள ப்ளாஷ்பேக் தேவையா? அதை மட்டும் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

ரணம் உருப்படியான திரில்லர் லிஸ்டில் சேர்ந்துள்ளது