மீண்டு வந்தாரா ஸ்ரீகாந்த் ? சத்தமின்றி முத்தம் தா விமர்சனம் !!

நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் பல வருட இடைவெளிகளுக்கு பிறகு வந்திருக்கும் திருவிழா திரைப்படம் திரில்லர் திரைப்படம் பத்தமின்றி முத்தம் தா எப்படி இருக்கிறது

செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரிப்பில் ஸ்ரீகாந்த் – பிரியங்கா திம்மேஷ் நடிப்பில் ராஜ் தேவ் இயக்கியுள்ளார்.

ஒரு இளம் பெண் ஆக்சிடென்ட் ஆகி, ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிறார். அவளது கணவன் நான் தான் என, ஸ்ரீகாந்த் அவளை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு கூட்டி செல்கிறார். ஆனால் அவளது உண்மையான கணவன் போலீசில் தன் மனைவியை காணாமல் போனதாக புகார் செய்கிறார்.

இன்னொருவனின் மனைவியை ஏன் ஸ்ரீகாந்த் கடத்திக் கொண்டு வந்து வைத்திருக்கிறார் ? அதன் பின்னணி என்ன? எதற்காக இதையெல்லாம் செய்கிறார் ? அந்த பெண்ணுக்கு உண்மை தெரியும் போது தெரிய வரும்போது அவள் என்ன செய்கிறாள் ? இதுதான் படத்தின் கதை

கேட்க சுவாரஸ்யமாக இருக்கும் ஒன்லைன் பார்க்கும்போது அந்தளவு ஈர்ப்பைத் தரவில்லை.

தன் சினிமா கேரியரே முதல் முறையாக ஒரு நெகட்டிவ் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த். ஒரு பெண்ணை கடத்துவது பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வது என, வில்லன் முகம் காட்டி நடித்திருக்கிறார்

நாயகியாக கன்னட நடிகை பிரியங்கா, ஸ்ரீகாந்த் கணவன் இல்லை என தெரிய வரும்போது ஏற்படும் அதிர்ச்சியிலும் தவிப்பிலும் நல்ல நடிப்பை தந்து இருக்கிறார். மலையாள நடிகர் ஹரிஷ் பாரடி போலீஸ் கதாபாத்திரத்தில் வந்திருக்கிறார். அவரை கூப்பிட்டு வீணடித்திருக்கிறார்கள்

நல்லதொரு த்ரில்லர் கதைக்கான அத்தனை அம்சங்களும் படத்தில் இருந்தாலும், படத்தின் மிக மோசமான மேக்கிங், நடிப்பு எல்லாம் சேர்ந்து, படத்தை நாசப்படுத்தி விடுகிறது.

எந்த ஒரு கட்டத்திலும் நமக்கு எந்த ஒரு சுவாரசியமும் ஏற்படும்படியான காட்சிகள் எதுவுமே படத்தில் இல்லை. படத்தில் வரும் எந்த காட்சிகளிலும் அதற்கு உண்டான அழுத்தமும், நம்முள் உணர்வுகளை கடத்தும் அளவிலான உருவாக்கமும் இல்லை.

ஹாலிவுட்டில் Secret Obsession என்ற பெயரில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் நகலாக இந்த திரைப்படம் வெளிவந்திருக்கிறது. அதன் அத்தனை திருப்பங்களும் இப்படத்தில் அப்படியே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் மாற்றங்கள் செய்தவர்கள், படத்தை உருவாக்கத்திலும் அதே அளவு கவனத்தை கொடுத்திருக்கலாம்.

கேமரா, எடிட்டிங், மியூசிக், என எதுவும் படத்தின் சரியான வேலையை செய்யவில்லை

முழு படமும் நம் பொறுமையை சோதிப்பதிலேயே கடந்து போய் விடுகிறது. திரில்லர் அனுபவம் தர வேண்டிய படம், சோக அனுபவம் தருகிறது.