டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி – ஜூன் 22

0
348

‘மிருதன்’ படத்தை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவியும், இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘டிக் டிக் டிக்’. ‘மிருதன்’ படத்தில் ஜாம்பிகளின் கதையை சொன்ன சக்தி சௌந்தர் ராஜன் இப்படத்தில் விண்வெளி கதையை கையிலெடுத்திருக்கிறார். ‘டிக் டிக் டிக்’ தான் இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவை நோக்கி வரும் ஒரு ஆபத்து, அதை தடுக்க, வேறு நாட்டு அரசு விண்வெளியில் பதுக்கி வைத்துள்ள அனுகுண்டு தேவைப்படுகின்றது. ஆனால், அதை எடுப்பது அவ்ளோ எளிது இல்லை, இதற்காக மேஜிக் கலையில் சிறந்து விளங்கும் ரவியை ஒரு டீமுடன் இந்திய அரசாங்கம் அனுப்பி வைக்கின்றது, இதை இந்த டீம் வெற்றிகரமாக செய்து முடித்ததா? என்பதுதான் இப்படத்தின் கதையாம்

திரைப்பட உலகில் நடந்த தமிழ் சினிமா மறுசீரமைப்பு போராட்டத்திற்கு முன்னதாக இப்படம் வெளியாகவிருந்தது. ஆனால் இப்படத்தின் ரிலீஸும் தள்ளிப்போனது. இப்போது ‘டிக் டிக் டிக்’கை ஜூன் 22-ஆம் தேதி ரிலீஸ் செய்ய தமிழ் திரைப்பட வெளியீட்டு ஒழுங்குப்படுத்தும் குழுவினர் அனுமதி அளித்திருக்கிறார்கள்.

இதனால் ரசிகர்களின்ன் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘டிக் டிக் டிக்’ ஜூன் 22-ஆம் தேதி வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது. நிவேதா பெதுராஜ் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் முதன் முதலாக நடித்துள்ளார். டி.இமான் இசை அமைக்கும் 100-ஆவது படம் என்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு