சன் டிவி தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் ஆக்ஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது ஜெயிலர் திரைப்படம். இப்படத்திற்காக வரலாற்றில் முதல் முறையாக இந்த விளம்பர பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து மீடியாவில் விளம்பரம் செய்து வருகிறது சன் டிவி. ஆனால்… அங்கு தான் செய்தியே.
பொதுவாக தமிழ்நாட்டில் சன் டிவிக்கு இருக்கும் மதிப்பு வேறு எந்த ஒரு மீடியாவிற்கும் இல்லை. தொலைக்காட்சி வழியே வீடு வீடாக புகுந்து ஒரு உறுப்பினராகவே மாறியிருக்கிறது. சன் டிவி படம் தயாரிப்பில் இறங்கிய போது பொதுவாக பத்திரிக்கை ஊடகங்களுக்கு கொடுக்கப்படும் பேட்டியோ, செய்தியோ எதுவும் தரப்படுவதில்லை. அது மட்டுமில்லை படத்தை விமர்சனத்திற்காக ஊடக பத்திரிகை காட்சி கூட போடாமல் நேரடியாக திரையரங்கு வெளியீடு மட்டுமே செய்து வந்தது.
பீ ஆர் ஓ பொறுப்பேற்று மீடியா ஷோ போடுவது வாடிக்கை. அதற்காக படத்தில் பணியாற்றிய பெரிய நடிகர்கள், இயக்குநர்களின் தயவில் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காக தங்கள் செலவில் ப்ரிவ்யூ காட்சியை திரையிட்டார்கள். ஆடியோ வெளியீட்டு விழாவில் முன்பெல்லாம் போனால் போகிறதென்று ஒரு சில டிக்கெட்டுகள் முக்கிய பத்திரிக்கைகளுக்கு வழங்கப்பட்டன. இப்போது அதுவும் இல்லை. ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு வரையிலுமே இது தான் வரலாறு.
ஆனால் இப்போது வரலாற்றில் முதல் முறையாக ஜெயிலர் படத்திற்காக டிஜிட்டல் மற்றும் மீடியாவில் விளம்பரம் செய்து வருகிறது. இதற்கென தனி டீம் அமைத்து, இணையம் முழுக்க ஜெயிலர் செய்தி பாஸிட்டிவ்வாக வர வேண்டும் என களமிறங்கியிருக்கிறது இந்தக்குழு.
இயக்குநர் நெல்சனின் பீஸ்ட் படத்திற்கு கடுமையான நெகட்டிவ் ரிவ்யூ வந்தது. ரஜினியின் அண்ணாத்த படமும் நெகட்டிவ் ரிவ்யூ வந்தது இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்கு நெகட்டிவ் ரிவ்யூ வரக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்கிறது சன் டிவி. அதனால் தான் இந்த முறை வரலாற்றில் முதன்முறையாக மீடியாவிற்கு விளம்பரங்கள் தந்திருக்கிறது சன் டிவி. மேலும் முன்னெப்போதும் இல்லாத புது வழக்கமாக ஜெயிலர் படக்குழுவினரும் மற்ற மீடியாவிற்கு பேட்டியெல்லாம் கொடுத்து வருகிறார்கள்.
இந்த விளம்பரத்திற்கு தனிக்குழு அமைக்கப்பட்டிருக்கிறதாம் ஆனால் இந்தக்குழுவினர் பரப்பரப்பாக தொடர்ந்து செய்தி தரும் சினிமா ஊடகங்களை விட்டு விட்டு, தங்களுக்கு சாதகமான மீடியாவிற்கும், நண்பர்களுக்கும் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு விதமான தொகையில் விளம்பரம் தந்து வருகிறார்களாம். இதனால் பரப்பரப்பாக செயல்படும் பல செய்தி இணையதளங்களுக்கு நிறுவனங்களுக்கு விளம்பரம் தரப்படவும் இல்லையாம்.
நெகட்டிவ்வை தவிர்க்க நினைக்கும் சன் டிவிக்கு தெரிந்து தான் இது நடக்கிறதா என்று தெரியவில்லை. ஆக்ஸ்ட் 10 க்குள் இன்னும் நிறைய காமெடிகள் எதிர்பார்க்கலாம்.