11
Feb
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேஸ்ட்ரோலில் நடிக்க, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் வந்திருக்கும் திரைப்படம் லால் சலாம். ஜெயிலரின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு, ரஜினிகாந்த் படத்தில் ஒரு கேமியோ செய்திருக்கிறார் அதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதிலும் நிஜ வாழ்க்கையில் ரஜினிகாந்த் மீதான விமர்சனங்களை தாண்டி, இப்படம் மத ஒற்றுமையை பேசுவதால், படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது ஒரு கிராமத்தில் ந்டக்கும் இந்து முஸ்லிம் சண்டை தான் கதைக்களம். மொய்தீன் பாய் எனும் பாத்திரத்தில் ரஜினி, ஒரு அழகான கிராமம் அங்கு மொய்தீன் பாய் உருவாக்கிய கிரிக்கெட் அணியில், அவரது மகன் விக்ராந்தும், விஷ்ணு விஷாலும் விளையாடி வருகிறார்கள். ஒரு கட்டத்தில் பொறாமையால் அந்த அணியில் இருந்து, விஷ்ணு விஷால் நீக்கப்பட, அவர் வெளியில் சென்று வேறொரு அணியை ஆரம்பிக்கிறார். இப்போது அந்த ஊரில் இந்து முஸ்லீம் என இரு…