08
Sep
சீரியல் ஒன்றில் இந்த கால திருமணத்தில் நடக்கும் நிகழ்வுகளை விமர்சித்துப் பேசியதால் மக்களிடையே ட்ரெண்டானவர் நடிகர் ஜி.மாரிமுத்து. இன்றைய தலைமுறைக்கு அவரை சினிமா, சீரியல் நடிகராகத் தான் பெரும்பாலும் தெரிந்திருக்கும். ஆனால், இயக்குநராகவே அவர் தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார். ஆரம்பகாலத்தில் வைரமுத்துவிடம் பணியாற்றிய மாரிமுத்து, பின்னர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற படங்களில் பணியாற்றியவர் பின்னர், மணிரத்னம், வசந்த், சீமான் போன்ற இயக்குநர்களிடம் வேலை பார்த்தார். மன்மதன் படத்தில் சிம்பு டீமில் கோ-டைரக்டராகவும் பணிபுரிந்தார். பிரசன்னா, உதயதாரா நடித்து 2008-ல் வெளியான கண்ணும் கண்ணும் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் குவிக்கவில்லை என்றாலும் வித்தியாசமான திரைக்கதைக்காக மாரிமுத்து பாராட்டப்பட்டார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு 2014-ல் விமல், பிரசன்னா நடித்து வெளியான புலிவால் படம் மூலம் கம்பேக் கொடுத்தார். இடையில், அவரை நடிகராகத் தனது யுத்தம் செய்…