கும்கி 2 ஹீரோயின் அதிதி மேனன் – ஆகஸ்டில் ஷூட்!

கடந்த 2012-ஆம் ஆண்டு ரிலீஸானது விக்ரம் பிரபு – லக்ஷ்மி மேனன் நடிப்பில் ’கும்கி’. பிரபு சாலமன் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனிலும் வசூல் மழை பொழிந்தாக கூறப்பட்டது. இதில் தம்பி ராமையா, ஜோ மல்லூரி, அஸ்வின் ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதனிடையே ‘தொடரி’ படத்தைத் தொடர்ந்து, ‘கும்கி 2’ படத்துக்கான நாயகியின் தேர்வில் கவனம்செலுத்தி வந்தார் இயக்குநர் பிரபு சாலமன். முதலில் நடிகர் ராஜசேகரின் மகளான ஷிவானி ஒப்பந்தமாவதாகத் தகவல் வெளிவந்தது. ஆனால், அச்செய்தி வதந்தி எனத் தெரிவித்த பிரபு சாலமன் நாயகியைத் தேர்வுசெய்து வருவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘கும்கி 2’ படத்துக்குக் நாயகியாக அதிதி மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். ‘பட்டதாரி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அதிதி மேனன், தற்போது அமீர் இயக்கும் ‘சந்தனத்தேவன்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். பல நாயகிகள் தேர்வுக்குப் பிறகு, அதிதி மேனன் பொருத்தமாக இருந்ததால், தற்போது அவரை ஒப்பந்தம் செய்துள்ளார் பிரபு சாலமன். ‘பட்டதாரி’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அதிதி மேனன். அமீர் இயக்கும் ‘சந்தனத்தேவன்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருவதோடு, இதன் படப்பிடிப்புக்கான இடங்களையும் தேர்வு செய்து வருகிறார் பிரபு சாலமன். ‘கும்கி’ முதல் பாகத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார், இப்படத்துக்கும் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டி.இமானுக்குப் பதிலாக நிவாஸ் கே.பிரசன்னா இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். யானையைச் சுற்றி கதையின் கரு அமைக்கப்பட்டாலும் இப்படமும் காதல் கதையாகத் தான் இருக்கும் என்று பிரபு சாலமன் முன்னரே தெரிவித்திருந்தார். மேலும், ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படவுள்ள இப்படத்தின் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.