இராவண கோட்டம் திரை விமர்சனம்

இயக்கம் – விக்ரம் சுகுமாரன்

நடிப்பு – சாந்தனு, பிரபு, கயல் ஆனந்தி

இசை – ஜஸ்டின் பிரபாகரன் 

படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர்

தயாரிப்பு – கண்ணன் ரவி

மத யானைக்கூட்டம் எனும் க்ளாசிக்கல் படத்தை தந்த விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் ஷாந்தனு நடிப்பில் வெளியாகியிருக்கும் படம். இந்த கூட்டணி மண்சார்ந்த கதை எனும் போது இந்தப்படம் சாந்தனுவிற்கு வாழ்வு தரும், தமிழ் சினிமாவிற்கு நல்ல படைப்பாக இருக்கும் எனும் எதிர்பார்ப்பு நிலவியது அந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றி இருக்கிறதா இராவண கோட்டம் ?

ஒரு ஊரில் மேலத்தெரு, கீழத்தெரு ஆட்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள். கிராமத்திற்கே அய்யாவாக இருந்து காப்பாற்றுகிறார் பிரபு. கீழத்தெரு சார்பில் இளவரசு இருக்கிறார். இரண்டு கூட்டத்திற்குமான இளைஞர்களில் சாந்தனுவும் ஒரு புதுமுகமும் நடித்திருக்கிறார்கள். இந்த கிராமத்தை பிரிக்க நினைக்கும், அரசியல்வாதிகள். இரு இளைஞர்களுக்கிடையே வரும் கயல் ஆனந்தியின் காதல். பிரிந்து ஜாதிச்சண்டை போடும் கிராமம் மீண்டும் ஒன்றிணைந்ததா? என்ன ஆனது என்பதே படம்.

படத்தில் எல்லாம் இருக்கிறது அதே போல் எல்லாமே இல்லை. உண்மையில் நல்ல பட்ஜெட்டில், நல்ல நடிகர்களின் நடிப்பில் அனைவரின் உழைப்பும் தெரிகிறது ஆனால் கதை திரைக்கதை காட்சிகள் எதிலும் துளியும் சுவாரஸ்யமில்லை.

80 களில் பல இயக்குநர்கள் துவைத்து காயப்போட்ட கதை. படத்தின் ஆரம்பித்திலேயே படத்தின் முடிவு வரை அனைத்தும் தெரிந்து விடுகிறது. அதுவே படத்தின் மிகப்பெரும் பலவீனம்.

சாந்தனு உண்மையிலேயே நன்றாக உழைத்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பில் தெரிகிறது ஆனால் படம் அவரை காப்பற்றவில்லை. கயல் ஆனந்திக்கு எப்போதும் காதல் என சுற்றும் சின்ன பாத்திரம் நன்றாகவே செய்துள்ளார்.

 

Shanthnu's Raavana Kottam shooting wraps up

நண்பராக வரும் புதுமுகம் தமிழுக்கு நவரசம் தரும் நல்லதொரு நடிகர் கிடைத்துள்ளார். தனக்குள் மருகுவதும், வில்லத்தனம் காட்டுவதும் சிறப்பு.
இசை ஒளிப்பதிவு படத்திற்கு நல்ல பலமாக அமைந்துள்ளது.

படம் முழுக்க ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் லாஜிக் மீறல்கள், தேவையில்லா இழுவையான க்ளைமாக்ஸ், ஆதிக்க சாதி பரிவு பேசும் வசனங்கள் படத்தை பின்னிழுக்கின்றன. மத யானைக்கூட்டம் சுகுமாரன் தானா?

இராவண கோட்டம் நன்றாக வந்திருக்க வேண்டிய திரைப்படம் !