11
May
இயக்கம் - விக்ரம் சுகுமாரன் நடிப்பு - சாந்தனு, பிரபு, கயல் ஆனந்தி இசை - ஜஸ்டின் பிரபாகரன் படத்தொகுப்பு - லாரன்ஸ் கிஷோர் தயாரிப்பு - கண்ணன் ரவி மத யானைக்கூட்டம் எனும் க்ளாசிக்கல் படத்தை தந்த விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் ஷாந்தனு நடிப்பில் வெளியாகியிருக்கும் படம். இந்த கூட்டணி மண்சார்ந்த கதை எனும் போது இந்தப்படம் சாந்தனுவிற்கு வாழ்வு தரும், தமிழ் சினிமாவிற்கு நல்ல படைப்பாக இருக்கும் எனும் எதிர்பார்ப்பு நிலவியது அந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றி இருக்கிறதா இராவண கோட்டம் ? ஒரு ஊரில் மேலத்தெரு, கீழத்தெரு ஆட்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள். கிராமத்திற்கே அய்யாவாக இருந்து காப்பாற்றுகிறார் பிரபு. கீழத்தெரு சார்பில் இளவரசு இருக்கிறார். இரண்டு கூட்டத்திற்குமான இளைஞர்களில் சாந்தனுவும் ஒரு புதுமுகமும் நடித்திருக்கிறார்கள். இந்த கிராமத்தை பிரிக்க நினைக்கும், அரசியல்வாதிகள். இரு இளைஞர்களுக்கிடையே வரும் கயல் ஆனந்தியின் காதல். பிரிந்து ஜாதிச்சண்டை போடும் கிராமம்…