இந்தப்படம் இளைஞர்களுக்கு பிடிக்கும்! “புளூஸ்டார்” படம் பற்றி இயக்குனர் ஜெய்குமார்!

இந்தப்படம் இளைஞர்களுக்கு பிடிக்கும்! “புளூஸ்டார்” படம் பற்றி இயக்குனர் ஜெய்குமார்!

அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன் , திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, இளங்கோ குமாரவேல், பகவதிபெருமாள், அருண்பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் "புளூஸ்டார்" . லெமன்லீப் கிரியேசன் பிரைவேட் லிமிடெட் R. கணேஷ்மூர்த்தி, G.சவுந்தர்யா , மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜெய்குமார் இயக்கியிருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் கிரிக்கெட் எல்லோருக்கும் தெரிந்த விளையாட்டாகவும் , பிடித்தமான விளையாட்டாகவும் மாறிவருகிறது. சிற்றூர்கள் முதல் குக்கிராமங்கள் வரை கிரிக்கெட் என்பது இளைஞர்கள் மத்தியில் வெகுபிரபலம். அரக்கோணம் பக்கத்திலிருக்கும் சிறிய ஊரில் வாழ்கிற இளைஞர்களின் வாழ்க்கை , அவர்களின் விளையாட்டு , காதல், நட்பு , அரசியல், கொண்டாட்டம் என ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கும் படம்தான் 'புளூஸ்டார்' அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் , பிரித்வி பாண்டியராஜன் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே நன்றாக கிரிக்கெட் விளையாடக்கூடியவர்களாக இருந்தது படத்துக்கு பெரும் பலம். இந்தப்படம்…
Read More
இராவண கோட்டம் திரை விமர்சனம்

இராவண கோட்டம் திரை விமர்சனம்

இயக்கம் - விக்ரம் சுகுமாரன் நடிப்பு - சாந்தனு, பிரபு, கயல் ஆனந்தி இசை - ஜஸ்டின் பிரபாகரன்  படத்தொகுப்பு - லாரன்ஸ் கிஷோர் தயாரிப்பு - கண்ணன் ரவி மத யானைக்கூட்டம் எனும் க்ளாசிக்கல் படத்தை தந்த விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் ஷாந்தனு நடிப்பில் வெளியாகியிருக்கும் படம். இந்த கூட்டணி மண்சார்ந்த கதை எனும் போது இந்தப்படம் சாந்தனுவிற்கு வாழ்வு தரும், தமிழ் சினிமாவிற்கு நல்ல படைப்பாக இருக்கும் எனும் எதிர்பார்ப்பு நிலவியது அந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றி இருக்கிறதா இராவண கோட்டம் ? ஒரு ஊரில் மேலத்தெரு, கீழத்தெரு ஆட்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள். கிராமத்திற்கே அய்யாவாக இருந்து காப்பாற்றுகிறார் பிரபு. கீழத்தெரு சார்பில் இளவரசு இருக்கிறார். இரண்டு கூட்டத்திற்குமான இளைஞர்களில் சாந்தனுவும் ஒரு புதுமுகமும் நடித்திருக்கிறார்கள். இந்த கிராமத்தை பிரிக்க நினைக்கும், அரசியல்வாதிகள். இரு இளைஞர்களுக்கிடையே வரும் கயல் ஆனந்தியின் காதல். பிரிந்து ஜாதிச்சண்டை போடும் கிராமம்…
Read More
ஷாந்தனு நடிக்கும் “இராவண கோட்டம்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஷாந்தனு நடிக்கும் “இராவண கோட்டம்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Kannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில்,  நடிகர்  ஷாந்தனு நடிக்கும் "இராவண கோட்டம்" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ! Kannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த  மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "இராவண கோட்டம்".  மே 12 உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில்,  இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று இனிதே நடைபெறுகிறது. இந்நிகழ்வில் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் பேசியதாவது… இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குச் நான் இரண்டு நாட்கள் சென்றேன் ஆனால் அங்கு என்னால் சுகுமாரன் சாரை பார்த்துப் பேசக்கூட முடியவில்லை.  ஷுட்டிங் அவ்வளவு பிஸியாக இருந்தது. எல்லோரும் என்னிடம் அவரைப் பற்றிக் கேட்டபோது, ஷூட்டிங் முடிந்ததும் நாங்கள் இருவரும் இணைந்து பணி புரிவோம் என்று கூறினேன். அது போலப் படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்தார் மூன்றே நாட்களில் எங்கள் இருவருக்கும் ஒரு நல்ல பிணைப்பு…
Read More