உலக அளவில் மீடியா துறையில், சின்ன திரை தயாரிப்பிலிருந்து சினிமா தயாரிப்பிற்கு சென்று மாபெரும் வெற்றி பெறும் கலாச்சாரம் என்றுமே இருந்துள்ளது. அதே பாணியில் பல்வேறு பிரபல தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பில் ஈடுபட்ட பிரபல நிறுவனமான ‘ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் ‘ தமிழ் சினிமா துறையில் கால் பாதிக்கவுள்ளனர். அவர்கள் தங்கள் முதல் தயாரிப்பிற்கு கதாநாயகனாக நடிக்க, ஆக்ஷன் மற்றும் குடும்ப பாங்கான படங்கள் என இரு தரப்பட்ட படங்களிலும் கலக்கி உயர்ந்துள்ள நடிகர் ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.இப்படத்தை, சரண், மிஸ்கின் மற்றும் அமீருடன் போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ளார். ஜெயம் ரவிக்கு இணையாக ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘அடங்க மறு ‘ என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படம் குறித்து, ” ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் ” நிறுவனத்தின் உரிமையாளர் திருமதி. சுஜாதா விஜயகுமார் பேசுகையில், ” மக்களின் பேராதரவோடு எங்கள் நிறுவனம் சின்னத்திரை தயாரிப்பில் இவ்வளவு காலமாக பெரும் வெற்றி பெற்று நன்பெயரை சம்பாதித்துள்ளது. இந்த வெற்றி பயணத்தை இந்த படம் மூலம் சினிமாவிலும் தொடர முனைப்போடுள்ளோம் . இப்படத்தில் ஜெயம் ரவியுடன் பணியாற்றுவதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. ‘மாஸ்’ மற்றும் ‘கிளாஸ்’ என இரண்டு தரப்பினரும் ரசிக்கும் நடிகர் அவர். இப்பட இயக்குனர் கார்த்திக் தங்கவேலுக்கு இது முதல் படமாக இருந்தாலும் உதவி இயக்குனராக பெருமளவு அனுபவம் பெற்றவர். கதாநாயகியாக நடிப்பவர் ராஷி கண்ணா. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இந்த புதிய தொடக்கத்தின் மூலம் பல புதிய திறமைகளை ஆதரவளித்து அவர்களோடு பணியாற்ற முனைபோட்டுள்ளோம் ”.
“அடங்க மறு’ படத்தின் இணை தயாரிப்பாளர் – ஆனந்த் ஜாய், ஒளிப்பதிவாளர் -சத்யன் சூர்யன், இசையமைப்பாளர்- சாம் CS, எடிட்டிங்- ரூபன், வசனம்- விஜி, கலை இயக்குனர் – லால்குடி இளையராஜா, சண்டை பயிற்சியாளர் – ஸ்டண்ட் சிவா , நடன இயக்குனர் – பிருந்தா.சென்னையில் இன்று ஒரு எளிமையான விழாவோடு “அடங்க மறு,” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
Related posts:
“Dance Don Guru Steps 2023 Kollywood Awards“ நடனக் கலைஞர்களை கௌரவிக்கும் பிரம்மாண்ட விழா !December 10, 2023
குழந்தைகளுக்கு மிகவும் தேவையான படம் 'சில்லு வண்டுகள்’!January 29, 2021
பாடி சிவசக்தி திரையரங்கம் ; ஹைடெக் வசதிகளுடன் புது தோற்றத்துடன் திறப்பு விழா!March 15, 2018
சந்தானம் நடிக்கும் “சக்க போடு போடு ராஜா " - ஆடியோ ரிலீஸ் எப்போ?October 10, 2017
“வள்ளி மயில்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா !June 15, 2022