ஜீனியர் எம் ஜி ஆரின் இரும்பன் திரைப்படம் எப்படி இருக்கிறது!

இரும்பன் திரைவிமர்சனம்

இயக்கம் – கீரா
நடிகர்கள் – ஜூனியர் எம் ஜி ஆர், ஐஸ்வர்யா தத்தா, யோகி பாபு
இசை – ஶ்ரீகாந்த் தேவா
தயாரிப்பு – தமிழ் பாலா, R வினோத் குமார்

குறவர் இனத்தை சேர்ந்த ஒருவன் பணம் சேர்த்து மலேசிய சென்று அங்கு ஊசி பாசிகள் வியாபாரம் செய்ய நினைக்கிறார், இந்த சமயம் ஒரு பணக்கார பெண் மீது காதல் ஏற்படுகிறது, அந்தப் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய முயற்சி செய்கிறார் இதுவே இப்படத்தின் மையக்கதை,

இந்த படத்தில் ஜூனியர் எம்.ஜி.ஆர், ஆஃபிஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வலது தோள் பட்டையில் எம்ஜியாரைப் பச்சை குத்திக் கொண்டு, லுங்கியைத் தொடை தெரிய தூக்கிக் கட்டிக் கொண்டு குறவராக நடித்துள்ளார்.

எம்ஜியாராவது மூன்று அடி வாங்கிய பின் தான் கோதாவில் குதித்துப் பட்டையைக் கிளப்புவார். ஆனால், ஜூனியர் எம்.ஜி.ஆர் முதல் அடியில் இருந்தே பிளந்து கட்டுகிறார். அவரது ஓங்குதாங்கான உடல் ஸ்டன்ட் காட்சிகளின் நம்பகத்தன்மைக்கு உதவுகிறது. ஆனால் மற்ற காட்சிகளில், இது அவரது முதற்படம் என்பதை முகபாவனைகளாலும் உடற்மொழியாலும் நிரூபித்தவண்ணமே உள்ளார்.

குறவர்களை அருவருப்பாக பார்க்கும் மக்களுக்கு மத்தியில், மஹிமா, ஆஃபீஸை அன்புடன் பார்த்தவுடன், நாயகனுக்குக் காதல் வந்துவிடுகிறது. சமணத் துறவியாக மடத்தில் சேரும் மஹிமாவைக் கடத்திக் கடலுக்குக் கொண்டு சென்று விடுகின்றனர் ஆஃபீஸின் நண்பர்கள்.

இந்த படத்தில் ஆஸ்பித்திரியாக சென்ட்ராயனும், பிளேடாக யோகிபாபுவும் நடித்துள்ளனர். யோகிபாபு இல்லாவிட்டால் பார்வையாளர்களின் நிலை அதோகதிதான். படகில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு விபத்தில் கதாநாயகிகளை கதாநாயகன் காப்பாற்றுகிறான் அதன் பின் கதாநாயகன் மீது காதல் வருகிறது, புயல் அடித்து, படகுஓ ர் அழகான தீவிற்கு சென்றடைகிறது. அந்த தீவில் மாலை மாற்றி இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்களைக் கொன்றே ஆகவேண்டுமென, சென்னையில் இருந்து ஒரு கும்பல் படகில் ஏறி, கத்திகளைச் சுற்றிய படி உலாவி கொண்டு இருக்கிறது. அவர்களை சமாளித்து எப்படி காதலியை கரம் பிடிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை,

படத்தில் ஒரு காட்சி முடிந்து, அடுத்த காட்சிக்கு நகரும்போது எந்த வித தொடர்பும் இல்லாமல் நகர்கிறது, அதனால் மொத்த படமும் தனிதனி சீனாக மட்டுமே தெரிகிறது, படத்தில் டெக்னிக்கல் குழு வழக்கமான ஒரு டெம்ப்ளேட் படங்களுக்கு தேவையான வேலையை செய்துள்ளது

May be an image of 2 people and text that says "A SRK LEMURIA MOVIES இன்று முதல் உலகமெங்கும் YOGI BABU JUNIOR MGR & AISHWARYA DUTTA இரும்பன் PRODUCERS TAMIL BALA VINOTH KUMAR RAJ TAMILNADU RELEASE RAMESH"

எம் ஜி ஆர் பேரன் என அடைமொழியோடு வந்திருக்கும் படம் ஆனால் அது வருத்தத்தையே தருகிறது