ஒரு அடார் லவ் – விமர்சனம்!

மனிதர்கள் அது ஆணோ, பெண்ணோ.. ஒவ்வொருவருக்குள்ளும் பூக்கும் ஓர் மென்மையான உணர்வே காதல். இது இனிமை யானது, இளமையானது, அழகானது, ஆழமானது, மென்மை யானது, ஆனாலும் இந்த காதல் பல தரப்பிலும் பல வயதிலும் பல்வேறு காரணங்களால் வருவது இயல்பே. அந்த வகையில், பள்ளிப் பருவக் காதல் பலருக்கும் வந்த உணர்வு. அதை ‘இன்பாச்சு வேஷன்’ என்னும் ‘இனக் கவர்ச்சி’ என்றெல்லாம் மன நல மருத்துவர்கள் குறிப்பிட்டாலும் அந்த வயசில் வருவதை யாராலும் தடுக்கவும் முடியாது., மறைக்க அல்லது மறுக்கவும் முடியாது. அப்படியான ஒரு அடல்ட் லவ் ஸ்டோரி தான் -ஒரு அடார் லவ் படம்.

ஒரு பள்ளியில் 11-வது படிக்கும் ரோஷனுக்கும், நூரின் ஷெரிப்புக்கும் ஜஸ்ட் ப்ரண்ட்ஷிப் ஏற்படுகிறது. இந்த நிலையில், அதே பள்ளியில் வந்து சேருகிறார் பிரியா வாரியர். வந்த அந்த புது கேர்ளை பார்த்தவுடன் ரோஷனுக்கு காதல் மயக்கம் வந்து விடுகிறது. ஒரு கட்டத்தில் இருவருமே காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் தன் லவ்வராகி விட்ட ரோஷன், நூரின் ஷெரிப்புடன் ஃப்ரண்ட்லியாக பழகுவது பிரியா வாரியருக்கு பொறாமை ஆகிப் போக, இருவருக்கும் இடையே விரிசல் உண்டாகிறது.

அப்புறம்.. வழக்கம் போல் பிரியா வாரியருடன் மீண்டும் இணைய நினைக்கும் ரோஷன், நூரின் ஷெரிப்புடன் நெருக்கமாக பழகுவது போல நடிக்கிறார். அப்ப்டி பழக்கும் போதுஒரு கட்டத்தில் ரோஷன் – நூரின் ஷெரிப் இடையேயும் நெருக்கம் அதிகமாகி காதலாகிறது. கடைசியில், ரோஷன் யாருடன் இணைந்தார்? யார் காதல் வெற்றி பெற்றது? என்பதே படத்தின் மிச்சக் கதை.

காதல் காட்சிகளில் ரோஷன், பிரியா வாரியர் இளைஞர்களை கவர்கின்றனர். அதிலும் பார்வை யிலேயே பந்தி பரிமாறும் நவரச பாவங்களைக் காட்டி அசத்துகிறார். ஆனாலும் இண்டர்வெல் லுக்கு,  பின்னர் ரசிகர்களின் ஒட்டு மொத்த மனசை அள்ளுகிறார் நூரின் ஷெரிப். மற்றபடி அனீஷ் ஜி மோகன், தில்ருபா, மிச்செல் அல் டேனியல், ரோஷ்னா அன் ராய் என மற்ற கதாபாத்திரங்களும் ரசிக்கும்படி நடித்துள்ளார்கள்.

முன்னரே சொன்னது பள்ளிப்பருவத்தில் நடக்கும் விடலைக் காதலை, மட்டுமே கொண்டு முழு படமும் கொண்டு போய் அதையும் பெரும்பாலானோர் ரசிக்கும்படி இயக்கியிருக்கிறார் ஒமர் லூலு. குறிப்பாக தமிழில் வசனங்கள் சரியான இடத்தில் இடம்பெற்றிருப்பது மிகச் சிறப்பான ஒன்று.

ஷான் ரஹ்மான் இசையில் மலந்த மாணிக்க மலராய பூவே பாடல் பிரியா வாரியாரின் ஒற்றை கண் சிமிட்டலால் ஹிட்டடித்த நிலையில், ஏனைய பாடல்களும் ஓ கே ரகம்தான் . சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

ஆனால் இம்புட்டு மெனக்கெட்ட படத்தில் திருஷ்டி வைத்தது போல் க்ளைமாக்ஸ் அமைந்து விட்டதுதான் சோகம்

மொத்தத்தில் `ஒரு அடார் லவ்’ ஓரளவு பெட்டர் காதல் சினிமாதான்!