இயக்குநர் – வெங்கட் அட்லூரி
நடிகர்கள் – தனுஷ் சம்யுக்தா
கதை – 1900 களில் ஒரு குக்கிராம அரசுப்பள்ளிக்கு செல்லும் ப்ரைவேட் வாத்தியார் அங்குள்ள மாணவர்களை முன்னேற்ற நினைக்கிறார் அதற்கு வரும் தடைகளை தாண்டி ஜெயித்தாரா என்பதே கதை.
ஒரு நல்ல ஒன் லைன் கமர்சியலுக்கு ஏற்ற ஹீரோ நல்ல பட்ஜெட் இவை அனைத்தும் இருந்தும், இது தமிழ் படமா தெலுங்கு படமா என்ற சந்தேகதில் இரு ஆடியன்ஸ்கும் இல்லாமல் படு மொக்கையான படமாக மிஞ்சியிருக்கிறது வாத்தி.
தற்போது தம்ழில் ஒரு டிரெண்ட் ஆரம்பித்திருக்கிறது. உச்ச நடிகர்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்க, தெலுங்கில் படம் செய்து அதை இங்கும் வெளியிட நினைத்தான் விளைவு தொடர்ந்து யாரையும் கவராத மொக்கை படங்கள் வரிசை கட்டுகிறது.
ஒரு கதைக்கு நியாயம் செய்யாமல் நாம் எடுப்பதை சமாளிக்கலாம் என பார்டர் லாஜிக் பேசுகிறார்கள் படம் முழுதும். கதையே தெலுங்கு தமிழ்நாடு பார்டரில் நடக்கிறதாம். அதனால் தெலுங்கு வாடை வீசுமாம். என்ன சொல்வதென்று தெரியவில்லை.
தனுஷ் வழக்கமான கமர்ஷியல் படங்களில் என்ன நடிப்பாரோ அதையே செய்கிறார். சமீபத்தில் அவரின் மிக மோசமான நடிப்பு இது தான். அதிலும் பாரதி வேஷம் போட்டு வருவதெல்லாம் கொடூரம். சம்யுக்தா கடமையே என வந்து போகிறார். அவருக்கு ஹீரோயின் வேடம் ஆனால் முக்கியமாக ஒன்றுமே இல்லை. சமுத்திகரகனியை வீண் செய்துள்ளார்கள். படத்தில் எல்லோருமே ஏனோ தானோவென வந்து போகிறார்கள்.
டியூசன் படிக்க தம்ழிநாட்டிலிருந்து கடப்பா போகும் ஆரம்ப காட்சியிலேயே படம் ஒட்டாமல் போய் விடுகிறது. அதன் பிறகு படம் எங்குமே கவரவில்லை.
ஒரு வகையில் ஜீவி பிரகாஷ் மட்டும் தனியே படத்தை காக்க போராடுகிறார். படத்தின் டெக்னிகல் எல்லாம் ஓகே ஆனால் கதை திரைக்கதை வேண்டுமே..
வாத்தி தமிழ் தெலுங்கு என இருவருக்குமே பாடம் நடத்தவில்லை