தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் ஹீரோவாகும் காலம். சந்தானம், யோகி பாபுவிற்கு பிறகு, ஒரு முழு நீள ஹீரோவாக தன்னை பலப்படுத்திக் கொண்டு களமிறங்கியுள்ளார் சூரி.
விடுதலை படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் சூரியை வேறு தளத்தில் களமிறக்க, அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு, சூரி அந்த ரூட்டில் தன்னை கச்சிதமாக வடிவமைத்து கருடன் படத்தில் ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
இந்த முறை வெற்றி பெற்ற மிகப்பெரிய நடிகர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு, ஒரு அட்டகாசமான இயக்குனர் கையில், வெற்றிமாறன் கதையில் சூரி மீண்டும் சொல்லி அடித்திருக்கிறார்.
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரகனி, ஸ்வேதா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் சூரி நாயகனாக களமிறங்கியிருக்கும் கருடன் திரைப்படம் எப்படி இருக்கிறது ?
சூரி படத்தில் சசிகுமார் துணைக்கதாப்பாத்திரம் என்பதே ஒரு ஆச்சரியம்தான். இந்த மாதிரி நிறைய ஆச்சர்யங்கள் படத்தில் இருப்பதுதான் கருடன் படத்தின் மிகப்பெரிய பலம்
கருடன் படத்தின் கதை என்னவோ பலமுறை தமிழ் சினிமாவில் பார்த்தது தான் என்றாலும் அதை சொன்ன விதத்தில் தான் கருடன் படத்தின் குழு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
மண் பெண் இது மூன்றும் தான் உலகின் அழிவுக்கு காரணம் இது எந்த ஒரு உறவையும் எளிதாக நாசாமாக்கி விடும் இதுதான் இந்த கதையின் அடிநாதம். நாயாக ஒரு மனிதனுக்கு விசுவாசியாக இருக்கும் ஒருவன் சூழலால் கொலையாளியாக அவதாரம் எடுத்து நிற்பது தான் கருடன் படத்தின் ஒன்லைன்.
என்ன ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் சூரி நாயகனாக கலந்திருக்கும் கருடன் திரைப்படம் எப்படி இருக்கிறது
கடம்பூர் படம் முழுக்க ஒவ்வொரு காட்சிகளும் நடிகர்களை தாண்டி இயக்குனர் நிமிர்ந்து
படம் முழுக்க ஒவ்வொரு கட்சியிலும் நடிகர்களின் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு தாண்டி இயக்கம் தனித்து தெரிகிறது, அத்தனை கச்சிதமாகவும் ரசிகன் ரசிக்கும் விதமாகவும் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார் இயக்குனர் துரை செந்தில்குமார்.
சூரி, உன்னி முகுந்தன், சசிகுமார் என மூவருக்கும் இடையிலான உறவை விவரிக்கும் முதல் 20 நிமிடங்களின் காட்சிகள் அத்தனை அழகாக திரையில் வெளிப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு இடையே இருக்கும் உறவு, அவர்களின் மனநிலை, அவர்களின் குடும்பம் என ஒவ்வொன்றையும் அத்தனை தெளிவாகவே படத்தின் ஆரம்பத்திலேயே நமக்குள் கடத்தி விடுகிறார். அவை பின்னால் வரும் சம்பவங்களுக்கு முன்னதாகவே ரசிகனை தயார் படுத்தி விடுகிறது
படத்தின் அடுத்த மிகப்பெரிய பலம் படத்தின் ஹீரோ சூரியல்ல சசிகுமார் தான். அந்த சசிகுமார்பாத்திரத்தை முன்வைத்துதான் மொத்த படத்தின் கதையும் நகர்கிறது. அதை கச்சிதமாக புரிந்து கொண்டு, சூரியும் உன்னி முகுந்தனும் கூட சொல்லி அடித்திருக்கிறார்கள் சசிகுமார் பார்க்கும்போதே மிடுக்காக அவர் கதாபாத்திரம் தெரிவது, படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
சூரி ஹீரோவாக இல்லாமல் நடிகராகவே இந்த படத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறார், அதிலும் படத்தின் முக்கியமான காட்சியில் உன்னி முகுந்தனுக்கும் சசிக்குமாருக்கும் இடையில் ஏதாவது நடந்து விடுமோ என்ற பதபதைப்புடன் திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டு, அவர் பைக்கில் செல்லும் காட்சி அட்டகாசம். இடைவேளை காட்சியில் சாமி வந்தவராக ஆடும் போது, மொத்த திரையரங்கமும் ஆடுகிறது. ஒரு நடிகராக அங்கேயே மிகப்பெரிய வெற்றியை பதிய வைத்து விட்டார் இறுதிக்காட்சிகளில் ஒரு ஆக்சன் ஹீரோவாகவும் பின்னி எடுத்திருக்கிறார்
உன்னி முகுந்தன், படத்தில் இவருக்கு தான் மிக மிக கஷ்டமான வேடம். நட்பு, குரோதம் எல்லாவற்றையும் முகத்தில் காட்ட வேண்டும் அதை கச்சிதமாக, தன் கதாபாத்திரத்தை உணர்ந்து மிரட்டி இருக்கிறார்.
படத்தில் வரும் பெண் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் மிக வித்தியாசமாக இருப்பதும் படத்திற்கும் கதைக்கும் வளம் சேர்த்திருக்கிறது. ஸ்வேதா வரும் அத்தனை காட்சிகளும் தமிழ் சினிமா ஏன் இவரை கண்டுகொள்ள மறுக்கிறது என ஏக்கம் கொள்ள வைக்கிறது
ரு சரியான கமர்சியல் படத்திற்கு என்னென்ன தேவையோ அத்தனையையும் செதுக்கி, எதுவும் மிஸ் ஆகிவிடாமல் அதை ஒன்று சேர்த்து தந்திருக்கிறது படக்குழு.
யுவன் சங்கர் ராஜாவின் இசை பாடல்கள் விட பின்னணி இசை அற்புதம். ஒளிப்பதிவு நம்மை அந்த தேனி வட்டாரத்திற்கு இழுத்துச் சென்று விடுகிறது
சில வருடங்களாக ஏன் இவர் படம் செய்யாமல் இருந்தார் என்று ஏக்கமாக கேட்க வைத்து விடுகிறார் இயக்குனர் துரை செந்தில்குமார்.
இந்த கோடை விடுமுறைக்கு ஒரு விருந்தாக கிராமத்து விருந்தாக வந்திருக்கிறது கருடன் ஆனால் என்ன ஆக்சன் தான் கொஞ்சம் அதிகம் !!