18
Feb
இயக்குநர் - வெங்கட் அட்லூரி நடிகர்கள் - தனுஷ் சம்யுக்தா கதை - 1900 களில் ஒரு குக்கிராம அரசுப்பள்ளிக்கு செல்லும் ப்ரைவேட் வாத்தியார் அங்குள்ள மாணவர்களை முன்னேற்ற நினைக்கிறார் அதற்கு வரும் தடைகளை தாண்டி ஜெயித்தாரா என்பதே கதை. ஒரு நல்ல ஒன் லைன் கமர்சியலுக்கு ஏற்ற ஹீரோ நல்ல பட்ஜெட் இவை அனைத்தும் இருந்தும், இது தமிழ் படமா தெலுங்கு படமா என்ற சந்தேகதில் இரு ஆடியன்ஸ்கும் இல்லாமல் படு மொக்கையான படமாக மிஞ்சியிருக்கிறது வாத்தி. தற்போது தம்ழில் ஒரு டிரெண்ட் ஆரம்பித்திருக்கிறது. உச்ச நடிகர்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்க, தெலுங்கில் படம் செய்து அதை இங்கும் வெளியிட நினைத்தான் விளைவு தொடர்ந்து யாரையும் கவராத மொக்கை படங்கள் வரிசை கட்டுகிறது. ஒரு கதைக்கு நியாயம் செய்யாமல் நாம் எடுப்பதை சமாளிக்கலாம் என பார்டர் லாஜிக் பேசுகிறார்கள் படம் முழுதும். கதையே தெலுங்கு தமிழ்நாடு பார்டரில் நடக்கிறதாம். அதனால்…