மலையாள ரீமேக் ‘விசித்திரன்’ எப்படி இருக்கு?

 

எழுத்து & இயக்கம்: பத்மநாபன்
தயாரிப்பு: பாலா ஸ்டூடியோஸ், ஸ்டூடியோ 9, Shark Pictures
இசை: ஜீவி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: வெற்றிவேல் மகேந்திரன்
படதொகுப்பு: சதீஷ் சூர்யா

நடிகர்கள்: ஆர் கே சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி, இளவரசு, பகவதி பெருமாள்

முன்னாள் காவலாளி ஒருவரது முன்னாள் மனைவி ஒரு விபத்தி இறக்கிறாள். அந்த விபத்தை ஆராய அந்த காவலாளி முயல்கையில் அது ஒரு மிகப்பெரிய மருத்துவ குற்றத்தில் முடிகிறது. அந்த குற்றவாளிகளை அந்த காவலாளி கண்டுபிடித்தாரா, இல்லையா என்பது தான் கதை.

மலையாளத்தில் வெளியான ஜோசப் என்ற திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் இந்த விசித்திரன் திரைப்படம், மலையாளத்தில் இந்த படம் ஒரு ஸ்லோ பர்ன் திரில்லர் வகையை சார்ந்தது. இந்த மாதிரி திரைப்படங்களுக்கு மலையாள சினிமாவில் நல்ல வரவேற்பு உண்டு . ஆனால் தமிழ் சினிமாவில்  ஸ்லோ பர்ன் திரில்லர் வகை படங்கள் வருவதில்லை, அதனால் அதற்கு வரவேற்பும் இல்லை.

விசித்திரன் திரைப்படம் இந்த நிலையை மாற்றியுள்ளது. தமிழுக்கு ஏற்றார் போன்ற ஒரு  ஸ்லோ பர்ன் திரில்லர் திரைப்படமாக வெளிவந்துள்ளது. ஆர் கே சுரேஷ் தனது நடிப்பாற்றலை வெளிகொணர்வதற்கான படமாய் இது அமைந்துள்ளது. அவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மலையாள பதிப்பின் வீரியம் குறையாமல் தமிழுக்கு கொண்டுவந்ததில் ஆர்கே சுரேஷ்க்கும் பெரிய பங்கு உண்டு. மலையாளத்தில் இயக்கிய பத்மநாபன், தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார், அதனால் படம் தரம் குறையாமல் வந்துள்ளதுபடத்தில் இளவரசும், மாரிமுத்து இருவரும் தேர்ந்த நடிகர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். ஜீவியின் இசை படத்தின் ஜீவன் குறையாததற்கு முக்கிய காரணம்தவறுகள் ஏதுவும் இல்லாத நேர்த்தியான ரீமேக்காய் வெளிவந்துள்ளது விசித்திரன்.

திரில்லர் ரசிகர்களுக்கான விருந்தாய் இருக்கும் விசித்திரன்