தமிழின் முதன்மையான ஓ.டி.டி தளம் என்கிற பெருமையோடு நடைபோடுகிறது ஆஹா தமிழ்.

தமிழின் முதன்மையான ஓ.டி.டி தளம் என்கிற பெருமையோடு நடைபோடுகிறது ஆஹா தமிழ்.

பிராந்திய மொழி ஓ.டி.டிகளில் முதன்மையானதும் வேகமாய் வளர்ந்து வருவதுமான ஆஹா தமிழ் இப்போது தன் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறது. மண்ணின், அதன் மக்களின் கதைகளைப் பேசுவதில் கவனம் செலுத்தும் ஆஹா தமிழின் அடுத்தப் படைப்பு 'தி கிரேட் இந்தியன் கம்பெனி' எனும் தினத்தொடர். ஜனனி அசோக் குமார், விஷ்ணு, ஆர்ஜே சரித்திரன், செளந்தர்யா நஞ்சுண்டான், வினோத் மற்றும் பலர் நடிக்கும் இந்தத் தொடர் அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விக்கும்வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. பரபரப்பான சென்னையை களமாகக் கொண்டு, இந்தியப் பொருட்களை மட்டுமே வாங்கி விற்கும் நிறுவனமான 'தி கிரேட் இந்தியன் கம்பெனி'யின் கதையையும் அதன் பணியாளர்களின் வாழ்க்கையையும் நகைச்சுவை கலந்து பேசும் தொடர் இது. தங்கள் நிறுவனம் சந்திக்கும் சவால்களையும் தங்கள் தனிப்பட்ட வாழ்வின் பிரச்னைகளையும் கூட்டாக எப்படி அந்தப் பணியாளர்கள் சமாளிக்கிறார்கள் என்பதே இந்தத் தொடரின் சாராம்சம்.சென்னையில் இன்று நடந்த இந்தத் தொடரின் பூஜையில் அதில் நடிக்கும் நட்சத்திரங்களும் ஆஹா…
Read More

ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் 1 கோடி பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்த “உடன்பால்” திரைப்படம் !!

ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில், டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், நடிகர் சார்லி நடிப்பில் சமீபத்தில் வெளியான “உடன்பால்” திரைப்படம் பார்வையாளர்களிடம் பெரும்வரவேற்பை பெற்று, 1 கோடி பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், சார்லி, 'சேதுபதி' பட புகழ் நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி, நடிகை அபர்னதி, விவேக் பிரசன்னா, KPY தீனா, நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் நடிப்பில் ஆஹா தளத்தில் வெளியான திரைப்படம் “உடன்பால்”. குடும்ப பின்னணியில் இன்றைய சமூகத்தில் உறவுகள் பணத்திற்காக எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்பதை அற்புதமான ப்ளாக் காமெடியில் சொல்லியிருந்தது இந்த திரைப்படம். மேலும் இன்றைய சமூகத்தில் நம் தாய்தந்தையரிடம் நாம் எவ்வாறு நடந்த கொள்ள வேண்டும் என்பதை அழுத்தி சொல்லியுள்ளது…
Read More
ஆஹாவின் அடுத்த படைப்பான உடன்பால் எப்படி இருக்கு!

ஆஹாவின் அடுத்த படைப்பான உடன்பால் எப்படி இருக்கு!

ஒரு திரைப்படம் பார்க்க இப்போது வழிகள் பல வந்துவிட்டன. திரையங்கு மட்டுமே செல்ல வேண்டிய அவசியமில்லை மொபைல் திரை வீட்டு திரை வரை சினிமா வந்துவிட்டது. ஆனால் ஓடிடிக்கான திரைப்படம் திரையரங்குக்கான திரைப்படம் வேறு இந்த வேறுபாடை அதற்கான கதைகளை கண்டடைவதில் தான் தமிழ் சினிமா தடுமாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதை சொல்லியடித்து ஜெயித்திருக்கிறது உடன்பால். இப்படம் ஓடிடி படம் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு ஒரு அட்டாகாசமான உதாரணம். சார்லியின் மகனும் மகளும் சேர்ந்து பணக்கஷ்டத்தில் அவர்கள் வாழும் வீட்டை விற்றுத்தர கேட்கிறார்கள் சார்லி மறுத்து விட்டு வேலைக்கு செல்ல அவர் வேலை பார்க்கும் பில்டிங் இடிந்து ஆக்ஸிடெண்ட் ஆகிறது. அங்கு இறந்தவர்களுக்கு அரசு 20 லட்சம் தருகிறது என்ற அறிவிப்பு வந்தவுடன் மொத்தமும் தலைகீழாக மாறுகிறது அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை முழுக்க முழுக்க காமெடி கலந்து ஆச்சர்ய திரைக்கதையில் சொல்லி அசத்தியிருக்கிறார்கள். பெரியவர்களை மதிப்பது உறவுகளின் மீதான அன்பு எல்லாம்…
Read More
ஆஹா தமிழ் வழங்கும் “ரத்தசாட்சி” பத்திரிக்கையாளர் சந்திப்பு !

ஆஹா தமிழ் வழங்கும் “ரத்தசாட்சி” பத்திரிக்கையாளர் சந்திப்பு !

ஆஹா தமிழ் & மகிழ் மன்றம் தயாரிப்பில் இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அழுத்தமான படைப்பு "ரத்த சாட்சி". இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதையினை தழுவி மனதைக் கலங்க செய்யும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. 'ஆஹா தமிழ் ' ஓடிடி தளத்தில் 9 டிசம்பர் 2022 வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் ஜாவேத் ரியாஸ் கூறியதாவது., இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது நன்றிகள். இந்த படம் எனது மனதுக்கு நெருக்கமான படமாக மாறியது. இந்த படத்தை மெருகேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருந்தது. ஆனால் அது எங்களை எந்த வகையிலும் சோர்வாக்கவில்லை. இந்தப் படத்தில் ஒரு ஆன்மா இருக்கிறது. கதையிலும் இந்த ஆன்மா இருக்கிறது, அது படத்திலும் வந்து இருக்கிறது , அதற்குத் தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் தான் காரணம். படத்தில் 6 பாடல்கள் இருக்கிறது. அது படத்துடன்…
Read More
ஆஹா தமிழுடன் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் ‘பேட்டைக்காளி’ தீபாவளிக்கு வெளியாகிறது

ஆஹா தமிழுடன் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் ‘பேட்டைக்காளி’ தீபாவளிக்கு வெளியாகிறது

  சென்னை (செப்டம்பர் 28, 2022): ஆஹா தமிழுடன் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் 'பேட்டைக்காளி' படத்தின் மோஷன் போஸ்டருக்கான முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 'ஜல்லிக்கட்டு' உலகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் முதல் வெப் சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. தனித்துவமான கதைகள் மற்றும் ஒரிஜினல் கண்டெண்ட் என்ற அடிப்படையில் பல அசத்தலான படைப்புகளை பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் ஆஹா தமிழின் அடுத்த படைப்பான 'பேட்டைக்காளி', ஜல்லிக்கட்டு கதையை அடிப்படையாகக் கொண்டது. சமகால தமிழ் சினிமாவில் கவனிக்கத்த இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் படைப்பாக வரும் இந்த இணைய தொடரில் மக்கள் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு ஜல்லிக்கட்டு உலகத்தை பார்ப்பார்கள். ஏற்கனவே 'பேட்டைக்காளி' என்ற இந்தத் தலைப்பு, பார்வையாளர்காளிடையே 'யாரந்த பேட்டைக்காளி' என்ற ஆர்வத்தை உருவாக்கி உள்ளது. இந்த இணையத் தொடர், நல்ல கதையம்சத்துடன் கூடிய நடிகர்கள் மற்ற தொழில்நுட்பக் குழுவை கொண்டது. இயக்குநர் வெற்றிமாறன் இதன் ஷோ-ரன்னராக இருந்தாலும் 'பேட்டைக்காளி'…
Read More
எமோஜி இணைய தொடர் எப்படி இருக்கிறது ?

எமோஜி இணைய தொடர் எப்படி இருக்கிறது ?

எமோஜி இணைய தொடர் எப்படி இருக்கிறது ? இயக்கம் - ரங்கசாமி நடிகர்கள் - மஹத் , மானஷா சௌத்திரி, தேவிகா சதீஷ் ஒரு இளைஞனின் காதல் செக்ஸ் பயணமும் நினைவுகளும் தான் எமோஜி. ஆம் படித்தது சரி தான் செக்ஸ் பயணம். செக்ஸ் காட்சிகளை வல்கர் இல்லாமல் திரையில் காட்டுவது ஒரு கலை. அந்த வகையில் அடல்ட் காமெடியில் உணர்வு பூர்வமான காமெடி டிராமா என்றவுடன் நிமிர்ந்து ஆவலுடன் அமரும் நம்மை சோதிக்கிறது இந்த தொடர். அடல்ட் காமெடி கத்தி மேல் நடப்பது போன்றது. விகாரமில்லாமல் நம்மை சிரிக்க ரசிக்க வைக்க வேண்டும். ஆனால் இது எதற்கும் இவர்கள் கொஞ்சம் கூட முயற்சிக்கவில்லை. ஒவ்வொரு எபிஸோடும் ஒரு பெண்ணை மடக்குவதும் அவர்களுக்குள்ளான தழுவல்களுமாக செல்கிறது கதை. இம்மி அளவிற்கு கூட எங்கும் சுவாரஸ்யம் இல்லை. திரைக்கதை கடுமையான அயர்ச்சியை தருகிறது. நடிப்பு, மேக்கிங் இசை டப்பிங் என எதிலும் மெனக்கிடல்…
Read More