08
Jan
ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில், டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், நடிகர் சார்லி நடிப்பில் சமீபத்தில் வெளியான “உடன்பால்” திரைப்படம் பார்வையாளர்களிடம் பெரும்வரவேற்பை பெற்று, 1 கோடி பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், சார்லி, 'சேதுபதி' பட புகழ் நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி, நடிகை அபர்னதி, விவேக் பிரசன்னா, KPY தீனா, நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் நடிப்பில் ஆஹா தளத்தில் வெளியான திரைப்படம் “உடன்பால்”. குடும்ப பின்னணியில் இன்றைய சமூகத்தில் உறவுகள் பணத்திற்காக எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்பதை அற்புதமான ப்ளாக் காமெடியில் சொல்லியிருந்தது இந்த திரைப்படம். மேலும் இன்றைய சமூகத்தில் நம் தாய்தந்தையரிடம் நாம் எவ்வாறு நடந்த கொள்ள வேண்டும் என்பதை அழுத்தி சொல்லியுள்ளது…