ரெய்டு திரை விமர்சனம்!

ரெய்டு விமர்சனம் !!

 

இயக்கம் – கார்த்தி

விக்ரம் பிரபு, ஶ்ரீதிவ்யா

சமீபத்தில் இறுகப்பற்று மூலம் பாரட்டுக்களை குவித்த பிறகு வெளியாகியிருக்கும் விக்ரம் பிரபு படம். ரௌடி போலீஸ் ஆடுபுலி ஆட்டம் தான் கதை.

 

கன்னடத்தில் ஹிட்டடித்த டகரு படத்தை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து ரெய்டாக ஆக்கியிருக்கிறார்கள். ஆனால் சோதனை எலிகளாக ரசிகர்கள் மாறியது தான் சோகம்.

 

கோயம்பேடு மார்க்கெட்டை ஆண்டுகொண்டிருக்கக்கூடிய இரண்டு ரௌடிகள் சௌந்தர்ராஜன் & ரிஷி. இவர்கள் இருவரும் கதையின் நாயகி ஸ்ரீ வித்யாவுக்கு தொடர்ந்து பிரச்சனை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனை அறிந்த கதையின் நாயகன் விக்ரம் பிரபு அந்த இருவரையும் எச்சரிக்கிறார்.

 

திடீரென்று ஒருநாள் அந்த இரண்டு பேரும் மர்மமான முறையில் இறந்துவிடுகின்றனர். அதே சமயம் காவல் அதிகாரியான விக்ரம் பிரபு- வும் மர்மமான நபர்களால் தாக்கப்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார், அந்த இரண்டுபேரின் மர்மமான இறப்புக்கும், நாயகனின் இந்த நிலைக்கும் யார் கரணம்? இது தான் படத்தின் கதை…

 

சின்னக்குழந்தை கூட, க்ளைமாக்ஸை கணித்து எளிமையான விடக்கூடிய கதை. அதை உருவாக்கிய விதமோ அதை விட மோசம். இயக்குனர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கியுள்ளார். டகருவை அப்படியே தந்திருக்கலாம் கொஞ்சமாவது தப்பித்திருக்கும்.

 

சில படங்களின் மேஜிக்கை திரும்ப திரையில் கொண்டு வர முடியாது அவ்வளவுதான்.

நான் லீனியர் வகையில் கதை சொல்கிறார்கள், ஆனால் அது எதற்கு என்பது கடைசி வரை பிடிபடவில்லை. ஒரு போலீஸ் ரௌடி வேடத்தில் அலைகிறார் பின் போலீஸ் அவதாரம் எடுக்கிறார் எனும் ஒன்லைன் எல்லாம் ஒகே தான் அதை சொன்ன விதம் தான் கொடூரம்.

 

படத்தின் திருப்பங்கள், மேக்கிங், நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என எதிலுமே எந்த சுவாரஸ்யமும் இல்லை.

 

விக்ரம் பிரபு லுக், நடிப்பு என எல்லாமே படு மோசம். டானாக்காரன், இறுகப்பற்று என மனதை கொள்ளை கொள்ளும் படங்களை தருவது அவரது கேரியருக்கு நல்லது.

 

ரெய்டெல்லாம் வேண்டாம் இது அவருக்கும் நல்லதில்லை ரசிகர்களுக்கும் நல்லதில்லை.