27
Aug
16 வருடங்களுக்கு முன்னால் தடயங்கள் எதுவும் கிடைக்காத காரணத்தால் மூடப்பட்ட ஒரு கொலை, கொள்ளை வழக்கை கையில் எடுக்கும் ஒரு புது காவல்துறை அதிகாரி, அந்த வழக்கை விசாரிக்கும் போது சந்திக்கும் அமானுஷ்யம் நிறைந்த சம்பவங்கள் தான் கதை. 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.கதிரேசன் தயாரித்து இருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார். இதன் திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தில் அருள்நிதியுடன் கிஷோர், ஜெ.பி, ஷாரா, பவித்ரா மாரிமுத்து, தணிகை மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ராஜா சேதுபதி படத்தொகுப்பினை செய்துள்ளார். ரோன் ஏதன் யோஹன் இசையமைத்து உள்ளார். படத்தின் கதையும், கதையில் இருக்க கூடிய சில தருணங்களும் சுவாராஷ்யம் நிறைன்டஹ் ஒன்றாக தான் இருக்கிறது. பீட்சா, டிமாண்டி காலனி திரைப்படங்கள் போன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை அள்ள கூடிய…