மாமனிதன்
சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் காயத்திரி நடிப்பில், யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா இசையில் உருவான வாழ்வியல் சார்ந்த திரைப்படம். யுவன் சங்கர் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.
ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்த ஒரு நல்லவன் சூழ்ச்சியில் தோற்றுப்போக, அந்த ஊரிலிருந்து அவன் ஓடுகிறான். பின்னர் அவன் தன் குடும்பத்தை காக்க என்ன செய்கிறான் அந்த குடும்பம் என்ன ஆனது என்பதே படம்
3 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த படம் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. யுவன் சங்கர் ராஜா, இளையராஜா முதல் முறை இணைந்து இசையமைத்துள்ள படம் என்பது கூடுதல் சிறப்பு.
தோற்றுப்போகும் ஒருவனின் கதையை சொல்லவும் இங்கு ஆள் வேண்டும் அந்த வகையில் தோற்றுப்போனவனின் கதையை தொடர்ந்து சொல்லி வருகிறார் சீனு ராமசாமி. ஏமாற்றுக்காரன் ஓடிப்போவதில்லை நல்ல மனதுக்காரன் மட்டுமே ஓடுகிறான் என்ற ஆழ்ந்த அர்த்தம் நிறைந்த கதையை கூற முயற்சித்து இருக்கிறார் இயக்குனர்.
இந்த கதையின் நாயகி கதாபாத்திரத்தில் நடிக்க பலரும் கொஞ்சம் தயக்கம் காட்டுவார்கள், அந்த அளவில் நாயகியின் கதாபாத்திரம் வயதான ஒரு பாத்திர ஏற்றும் நடிக்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பல நடிகையர்களை கேட்டு இறுதியில் காயத்திரி நடித்தார். அவர் சிறப்பாக அவரது பங்களிப்பை கொடுத்துள்ளார் என்று தான் கூற வேண்டும். ஒரு இளம் பெண்ணிலிருந்து, வயதான பெண்மணியாக மாறும் கதாபாத்திரத்தை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். காய்த்ரியின் நடிப்பு பிரமாதம் என்று தான் கூறவேண்டும். நிச்சயம் தமிழ்சினிமாவில் முக்கியமான இடத்தை காயத்ரி பெறுவார்.
காசி கேரளா தேனி படப்பிடிப்பு நடந்ததுள்ளது, இளையராஜா பிறந்த பண்ணையபுரத்தில் படப்பிடிப்பு நடந்ததுள்ளது. வாழ்வியல் சார்ந்த கதையை உண்மைக்கு நெருக்கமாக படமாக்க இயக்குனர் முயற்சி செய்து, வெளிப்புறத்தில் அதிக படபிடிப்புகளை நடத்தியுள்ளார்.
படத்தில் வழக்கமான விஜய் சேதுபதியின் நடிப்பு படம் முழுவதும் தென்படுகிறது. புதிதான விஜய் சேதுபதியையும், அவரது புதுவித நடிப்பாற்றலையும் வெளிகொணரும் விதமாக படத்தில் அவருக்கு எதுவும் அமையவில்லை.