28
Jul
விக்ராந்த் ரோனா ஒரு கிராமத்தில் குழந்தைகள் தொடர்ந்து மர்மமான முறையில் இறந்துகொண்டு இருக்கிறார்கள். அதைவிசாரித்த காவல்துறை அதிகாரியும் இறக்கிறார். இந்த இரண்டு வழக்குகளையும் விசாரிக்க வரும் புதுகாவல்துறை அதிகாரி, அந்த கிராமத்தின் மர்ம முடிச்சுகளை அவிழ்கிறாரா இல்லையா என்பதே கதை. முதலில் இந்த படம் தமிழ் மக்கள் முற்றிலும் பழக்கபடாத ஒரு வகையான படம். இந்த படத்தின் இயக்குனர்அனுப் பந்தாரிக்கு தனித்துவமான ஒரு திரைமொழி இருக்கிறது, அதன் மூலம் கன்னடத்தில் தனக்கென ஒருதனி முத்திரை பதித்துள்ளார். அவரது முதல் படமான ‘RaangiTaranga’ படம் வெளியான போது, அது கன்னடமக்களுக்கு புதுவிதமாக இருந்தது. அதுபோல அவரது படம் இப்பொழுது தான் முதன்முதலாக தமிழில்வெளியாவதால், தமிழ் பார்வையாளர்கள் பலருக்கும் இந்த படம் நல்லா இல்லாத படமாக தோன்றும். ஆனால்இது தான் சினிமாவி வளர்ச்சி. இதுபோன்ற திரைப்படங்களும், கதை சொல்லும் விதமும் தான் சினிமாவின்பரிணாம வளர்ச்சி. அடுத்ததாக இந்த பாராட்டியே ஆக வேண்டிய முக்கிய காரணம்…