02
Sep
எளிய மக்களின் வாழ்வில் நடக்கும் பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து இயல்பான ஃபில் குட் படங்களை இயக்கி அதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சேரன்.இவர் இயக்கிய ஆட்டோகிராப் , தவமாய் தவம் இருந்து போன்ற படங்களுக்கு இப்போதும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் தனது படங்களில் அவரது திறமையை நிருபித்தவர், தற்போது அவர் நடிப்பில் தமிழ் குடிமகன் என்று ஒரு படமும் வெளியாகவுள்ளது இந்நிலையில் தற்போது சேரன் கன்னட நடிகர் சுதீப் உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம் தயாரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் ரூபாய் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் மூலம் சேரன் கமர்ஷியல் இயக்குநர் அவதாரத்தை எடுக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.