மன்மத லீலை திரை விமர்சனம் !

 

இயக்கம் – வெங்கட் பிரபு

நடிகர்கள்- அசோக் செல்வன் சம்யுக்தா ஹெக்டே. ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன்

கதை – 2010 அப்புறம் 2020 ல் ஒரே நேரத்தில் நடக்கும் இரண்டு கள்ளக்காதல் சம்பவங்களுக்கு என்ன தொடர்பு அதில் மன்மத லீலை புரியும் நாயகன் மாட்டிக்கொள்கிறானா? தப்பிக்கிறானா ? என்பதே கதை.

வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு வந்திருக்கும் படம். இளைஞர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது அதற்கு காரணம். படத்தின் டிரெய்லரில் வந்த அடல்ட் சமாச்சாரங்கள் ஆனால் படத்தில் அந்தளவு அடல்ட் காட்சிகள் இல்லாதது அவர்களுக்கு ஏமாற்றம் தான்.

வெங்கட் பிரபு குயிக்கி என்ற பெயரில் நூடுல்ஸ் போல், கோவிட் காலத்தில் ஓடிடிக்கு தயாரான படம் இப்போது மாநாடு வெற்றியால் திரைக்கு வந்திருக்கிறது. ஓடிடியில் உட்கார்ந்து பார்க்க என்ன தேவையோ அது படத்தில் இருக்கிறது ஆனால் திரையரங்கு அனுபவத்திற்கு சரிவரவில்லை என்றாலு
பெரிதாக ஏமாற்றவும் இல்லை.

இரண்டு வீடு நான்கு நபர்கள் இரண்டு கள்ளகாதல் நிகழ்வுகள் அதைச்சுற்றிய கிரேசிமோகன் பாணியில் அடல்ட் வசனங்கள் முதல் பாதி ஏமாற்றாமல் கடந்து விடுகிறது. முதல் பாதியை நினைத்து அமர்ந்தால் இரண்டாம் பாதியில் வெங்கட் பிரபு முத்திரை பலமாக இருக்கிறது நினைக்காத சில டிவிஸ்ட்களை காட்டி நம்மை திருப்தி படுத்தி அனுப்பி விடுகிறார்.

அசோக் செல்வன் எந்த பாத்திரத்திலும் தன்னை சரியாக பொருத்தி கொள்கிறார். இரண்டு இடங்களில் இளைஞனாகவும் முதிர்ச்சி அடைந்த கணவனாகவும் தன்னை வெளிக்காட்டியதில் கவர்கிறார். சம்யுக்தா ஹெக்டேக்கு தான் ஃபர்ஸ்ட் மார்க் மாட்டிக்கொண்ட பிறகு அவரது நடிப்பு அபாரம் நிறைய துணிச்சல் வேண்டும். ரியா சுமன், ஸ்ம்ருதி வெங்கட் தங்கள் பணிகளை சிறப்பாக செய்துள்ளார்கள். கயல் சந்திரன், ஜெயப்பிரகாஷ் இருவரும் நட்புக்காக வந்து பொயிருக்கிறார்கள்

பிரேம்ஜி இசை அட்டகாசமாக இருக்கிறது. பல இடங்களில் திரைக்கதை சொல்ல வருவதை கச்சிதமாக சொல்லிவிடுகிறது.

படத்தில் இருக்கும் ஒரு பெரிய குறை கெட்டது செய்பவன் தப்பிக்கலாம் எனும் கதுத்து தான் இது வெங்கட்பிரபுவுக்கு அழகல்ல

பொழுது போக்க ஒரு அடல்ட் சினிமா அவ்வளவே