ஜெயிலர் ஜெயித்தாரா?

 

ரஜினியின் முந்தைய படங்கள் சரியாக போகாத நிலையில் நெல்சனுடன் இணைந்து பாட்ஷா கலந்த காமெடி ஆட்டம் ஆடியிருக்கிறார்.

நெல்சனுக்கு பீஸ்ட் சரியாக போகாத நிலையில் இந்தப்படம் மிக முக்கியம் அதை உணர்ந்தே இயக்கியிருக்கிறார்.

இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் ஜெயிலர் ஜெயித்தாரா?

கதை – ஒரு முன்னாள் ஜெயிலர் அமைதியாக வாழ்ந்து வருகிறார், அவர் குடும்பத்திற்கு வில்லனால் ஆபத்து வர புயலாக பொங்கி எழ ஆரம்பிக்கிறார். பின்னர் வில்லனுக்கும் ஜெயிலருக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் கதை.

வாயதான ரிட்டயர்ட் ஜெயிலர், அன்பான தந்தை, ஆசையான தாத்தா, வெடித்து கிளம்பும் ஆக்சன் ஹீரோ என படம் முழுக்க ரஜினி விருந்து தான். ரஜினிக்கு நடிக்க நிறைய காட்சிகள் அவரும் குறை வைக்காமல் அடித்து ஆடியிருக்கிறார். இண்டர்வெல் காட்சி பாட்ஷா மாஸை ரிகிரியேட் செய்துள்ளது. ரஜினிக்காகவே செய்த படம் போல் இருக்கிறது. படத்தில் அவரைத்தவிர வரும் 1 டஜன் நடசத்திரங்களும் அவருக்கு சப்போர்ட் செய்து வந்து போகிறார்கள்.

மோகன்லால், சிவராஜ்குமார் இருவரும் ஸ்டைலாக வந்து மனதை அள்ளிப்போகிறார்கள். சுனில் உண்மையில் பின்னியிருக்கிறார் மனிதர் பேசும் அத்தனை டயாலாக்கும் பஞ்ச் தான்.

ரஜினியை மிரட்டும் வில்லனாக விநாயகன் மொத்த கிரைம் வன்முறையை நம்ப வைத்து மிரட்டிவிட்டார். மற்றவர்கள் வந்து போகிறார்கள் யோகிபாபு உட்பட, ஆனால் சிரிக்க வைக்கிறார்கள்.

நெல்சனுக்கு ஒரு தனியான திரைக்கதை வடிவம் இருக்கிறது மிக சீரியஸான க்ரைம் கதையில் விவகாரமான மனிதர்களை உலவவிட்டு அவர்களின் படு இயல்பான நடவடிக்கைகளால் நம்மை ப்ளாக் காமெடியில் சிரிக்க வைப்பது. இதிலும் கச்சிதமாக அதை செய்து முடித்திருக்கிறார். கூடவே ரஜினி ரசிகர்களுக்கும் சரியான விருந்து வைத்துள்ளார். சுனில் அடிக்கும் பஞ்ச் அனைத்தும் அக்மார்க் நெல்சனிசம்.

Jailer Tamil Movie Release Date, Star Cast, Budget, Plot, Trailer & More - JanBharat Times

படத்தின் மிகப்பெரிய தூண் அனிருத் படத்தை இசையால் நிமிர வைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் ரசித்து ரசித்து செதுக்கியிருக்கிறார்.

படம் கண்டிப்பாக ரசிகர்களை முழுதாக திருப்திபடுத்தியிருக்கிறது.

ஓகே இனி மைனஸை பார்க்கலாம். ஆரம்பத்தில் படம் ஷெல்ஃப் எடுக்க கொஞ்சம் டைமெடுக்கிறது அதே போல் க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் வலுக்கட்டாயமாக இழுத்து வைத்தது போல் இருக்கிறது இங்கு மட்டும் இன்னும் கொஞ்சம் உழைத்திருந்தால் படம் வேற லெவல் வேற லெவல்.