23
Nov
இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன், அபிராமி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து இருக்கும் ஜாலியோ ஜிம்கானா படம். இயக்குநர் சக்தி சிதம்பரம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படங்களையே இதுவரை தந்துள்ளார். அவருக்கு தீவிரமான கதை சொல்லல் பாணியெல்லாம் சரி பட்டு வராது. முழுக்க முழுக்க கலாட்டா காமெடியுடன் சிரிக்க சிரிக்க கதை சொல்லி அசத்தி விடுவார். அந்த வகையில் இந்த படம் திருப்தி செய்கிறதா ? படத்தில் பவானியின் குடும்பம் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு எம்.எல்.ஏவிடமிருந்து ஒரு பெரிய ஆர்டர் கிடைக்கிறது. அதை இவர்களும் சிறப்பாக செய்து கொடுக்கிறார்கள். அதை அதற்கான பணத்தை கொடுக்காமல் எம்எல்ஏ ஆட்கள் ஏமாற்றுகிறார்கள். இதைக் கேட்க போன பவானியின் தாத்தாவையும் அவர்கள் தாக்கி விடுகிறார்கள். இதனால் பவானியின் தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேலும், பவானியின் தாத்தா ஹாஸ்பிடலில் இருப்பதால் இவர்களால் கடையை நடத்த முடியாமல் தவிக்கிறார்கள். உடனே…