M4 இன்டர்நேஷனல் வழங்கும் அப்பு மூவிஸின் ‘ஜெனி’..!

M4 இன்டர்நேஷனல் வழங்கும் அப்பு மூவிஸின் ‘ஜெனி’..!

திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த 'ஜெனி'..! பல்லாண்டுகள் தமிழ்த் திரையுலகில் வெற்றி எழுத்தாளராக தயாரிப்பாளராக வலம் வந்தவர் திரைப்பட வித்தகர் தூயவன். அவரது புதல்வர் பாபு தூயவன் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் பயின்று 'கதம் கதம்' என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். 'இட்லி' என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார். அவரது மேற்பார்வையில் அவரது துணைவியார் A. முஸ்தரி தயாரித்திருக்கும் திகில் படம் தான் 'ஜெனி'. திரைப்படக் கல்லூரியில் பயின்று சில படங்களையும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியிருக்கும் நித்தியானந்தம்.B இயக்கத்தில் இந்தப்படம் உருவாகி இருக்கிறது பாரீஸ் ஜெயராஜ் படத்தின் முக்கிய வேடத்தில் நடித்த விவாந்த் நாயகனாக நடித்துள்ளார். 'மைடியர் பூதம்' திரைப் படத்தில் குழந்தை நாயகனாக மிரட்டிய பரம் விக்னேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களோடு மைதிலி, பிஜாய் மேனன், ஆக்க்ஷன் பிரகாஷ் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். துஷ்ட ஆவி ஒன்று சிறுவனை ஆக்ரமிக்க முயல அதிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும்…
Read More
“மை டியர் பூதம்”குழந்தைகளின் அழகான உலகத்தை நமக்கு காட்டும் – இயக்குநர் N ராகவன்

“மை டியர் பூதம்”குழந்தைகளின் அழகான உலகத்தை நமக்கு காட்டும் – இயக்குநர் N ராகவன்

“மை டியர் பூதம்”குழந்தைகளின் அழகான உலகத்தை நமக்கு காட்டும் - இயக்குநர் N ராகவன் அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை படப்புகழ் N.ராகவன் இயக்கியுள்ள திரைப்படம் “மை டியர் பூதம்”. தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் குறைவாக உள்ள ஏக்கதை போக்கும் விதமாக ஒரு அழகான ஃபேண்டஸி குழந்தைகள் படமாக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் பிரபுதேவா வித்தியாசமான தோற்றத்தில் பூதமாக இப்படத்தில் நடித்துள்ளார்.ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். ஜூலை 15 இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து இயக்குநர் N ராகவன் கூறியதாவது… என்னுடைய முதல் படம் மஞ்சப்பை ஒரு ஃபீல் குட் டிராமா, கடம்பன் ஆக்சன் டிராமா, எனக்கு எல்லா ஜானரிலும் படம் செய்ய வேண்டும் என்பது ஆசை அதனால் அடுத்த படம் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, குழந்தைகளுக்கான படம் செய்யலாம் என தோன்றியது. தமிழில் குழந்தைகள் உலகை சொல்லும் படங்கள்…
Read More

குழந்தைகளை ஈர்க்குமா இந்த பூதம் – மைடியர் பூதம் விமர்சனம்

மைடியர் பூதம். இந்த படம் குழந்தைகளுக்கான படம். அந்த வகையில் இந்த திரைப்படம் திருப்திகரமான ஒரு பணியை செய்திகிறதா என பார்க்கலாம். திக்கி பேசும் பிரச்சனையுள்ள ஒரு பள்ளி சிறுவனுக்கு தோழனாக ஒரு பூதம் வருகிறது. அந்த பூதம் வந்த பிறகு அந்த சிறுவனின் வாழ்கை என்ன ஆனது, அந்த பூதம் என்ன ஆனது என்பது தான் கதை. சிறுவர்களுக்கான படம் எப்பொழுதும் பஞ்ச தந்திர கதைகள், நீதி நெறி கதைகள் போன்றே வடிவமைக்க பட்டிருக்கிருக்கும். ஒவ்வொரு காட்சி தொகுப்பும் ஒரு நீதிநெறி கதைகளாக தான் இருக்கும். இந்த படமும் அதே போன்று தான் இருக்கிறது. வித்தியாசமாக எதுவும் இந்த படத்தில் இல்லை. சிறப்பான நடிப்பு, சிறப்பான இசை, சிறப்பான திரைக்கதை என எதுவும் இல்லை. ஒரு நேர்த்தியான திரைக்கதையும் இல்லை. குழந்தைகளுடன் வீட்டில் உட்கார்ந்து பார்க்கும் ஒரு படமாக இருக்கிறதா என்று கேட்டால் ஆம் என்று தான் சொல்ல வேண்டும்.…
Read More