Ghostbusters: Afterlife திரை விமர்சனம்!

இயக்கம் – Jason Reitman

நடிகர்கள் –  Carrie Coon, Finn Wolfhard, Mckenna Grace, மற்றும்  Paul Rudd 

கதைதந்தை இறந்த வீட்டை விற்க ஓஹ்லஹோமா உள்ள ஒரு  நகரத்திற்கு தன்  தந்தை இருந்த பூர்வீகஇடத்திற்கு வருகிறாள் ஒரு தாய். அங்கு அந்த  குழந்தைகள் தாத்தா பேய்களை அடிப்பவராக இருந்ததைஅறிகிறார்கள். தாத்தா தயாரித்து வைத்த ஆய்தங்களை கொண்டு அவர்கள் தற்காலத்தில் பேய்களை எப்படிஅழிக்கிறார்கள் என்பதே கதை

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான கோஸ்ட்பஸ்டர்ஸ்‘ (1984) மற்றும்கோஸ்ட்பஸ்டர்ஸ் II’ (1989) படங்களின்  தொடர்ச்சியாக மூன்றாவது பாகமாக வந்திருக்கும் படம்.

ஏற்கனவே 2016 ல் ஒரு பகுதி இதே போல் வந்து பெரும் தோல்வி அடைந்தது. ஆனால் அதிலிருந்து மாறுபட்டுகொஞ்சம் மேம்பட்ட திரைக்கதை அமைப்பில் வந்திருக்கிறது இப்படம்

கோஸ்ட்பஸ்டர்ஸ்’ (1984) மற்றும்கோஸ்ட்பஸ்டர்ஸ் II’ (1989) ஆகியவற்றை இயக்கிய இவான் ரீட்மேனின்மகன் ஜேசன் ரீட்மேன்ஆஃப்டர் லைஃப்இயக்கியுள்ளார்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இளைய ரீட்மேன், கோஸ்ட்பஸ்டர்ஸ் படங்களின் மிக முக்கியமான குதூகலத்தை இந்தப்ப்டத் தரவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

பேய்களை அழிக்கும் மிஷுன்கள் அதன் கதை அமைப்பு எல்லாம் 80 களில் புதிதாக இருந்த ஒரு கான்செப்ட்ஆனால் இப்போது அதையே திரும்ப எடுத்திருப்பது 80 களின் கதையை மீண்டும் பார்ப்பது போன்றஉணர்வையே தருகிறது.

கோஸ்ட்பஸ்டர்ஸ் குழந்தைகளால் கொண்டாடப்பட்ட படம் அதற்கு காரணம், அதன் காமெடி கலந்த கதைசொல்லலும் பேயின் விளையாட்டுக்களும் தான் இந்தப்படமும் அதையே செய்திருந்தாலும் படத்தின்திரைக்கதை இறுதி வரையிலும் எந்த பரபரப்பும் நமக்கு வருவதேயில்லை. ஒரு டிவி சீரியல் பார்ப்பது போன்றுதிரைப்படம்  பெரும் சோர்வை தருகிறது. முற்பகுதி கதையில் இருக்கும் சுவாரஸ்யம் முடிவில் இல்லாததுஏமாற்றமே.

முதல் பகுதியில் கதாப்பாத்திர அறிமுகங்களே பெரும் நேரத்தை எடுத்துகொள்கிறது. ஆனாலும் கதைகொஞ்சம் காமெடியாக நகர்வதால் நம்மை ஆச்வாசப்படுத்துகிறது. ஆனால் இரண்டாம் பகுதி அனிமலாகமாறும் மனிதர்கள் அதை அழிக்கும் மிஷின் மோபைல் உலகத்தில் சுத்த ஹம்பக். ஏற்கனவெ இருந்த ஐடியாவில்இன்னும் புதிதாக நிறைய யோசித்திருக்கலாம்.

ஒரு சிறு நகரத்தில் நடக்கும் கதை, குறைவான பாத்திரங்கள் எல்லாமே மினி பட்ஜெட் பட உணர்வை தருவதைதடுக்க முடியவில்லை. மார்வல் படங்களில்  ஆண்ட்மேனாக வந்த பால் இப்படத்தில் நாயகன் என்றார்கள்ஆனால் அவரோ துணை கதாப்பாத்திரமாக கூட அல்லாமல் கூட்டதில் ஒருவராக வந்து போகிறார்.

ஃபோபியாக, மெக்கென்ன கிரேஸ் ஆக வரும் சிறுமி  மட்டுமே அதிகம் கவர்கிறார். வருண் கூட வரும்பாட்காஸ்ட் சிறுவன் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார் ஃபின் வொல்ஃப்ஹார்ட் மற்றும் கேரி கூன் ஆகியோர்தங்கள் நடிப்பில் தேவையானதை செய்திருக்கிறார்கள்.

க்ளைமாக்ஸில், படம் மேடை மேஜிக்கை பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது

பழைய கோஸ்ட்பஸ்டர்ஸ் ரசிகர்களை திருப்திபடுத்தும் இடை மற்றும் இறுதி கிரெடிட் காட்சிகள் அவர்களுக்குபிடிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.

புதிய ரசிகர்களுக்கு இந்தப்படம் பொருத்தமில்லை. கோஸ்ட்பஸ்டர்ஸ் ரசிகர்கள் தங்கள் நாஸ்டாலஜியாவைபுதுப்பித்துகொள்ள ஒரு முறை தரிசித்து வரலாம்.