எப்படி இருக்கு RJ பாலாஜியின் வீட்ல விசேஷம்

 

ரயில்வே வேலை பார்க்கும் சத்யராஜ், மனைவி ஊர்வசி மகன்கள் ஆர்.ஜே.பாலாஜி, விஸ்வேஷ் மற்றும் தாயுடன் வாழ்ந்து வருகிறார். இதில் ஆசிரியராக பணிபுரியும் ஆர் ஜே பாலாஜி, பள்ளியின் நிறுவனர் மகளான அபர்ணா பாலமுரளி காதலித்து வருகிறார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யும் நிலையில், ஆர்.ஜே.பாலாஜி, தனது தாய் ஊர்வசி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். ஊர்வசியின் கர்ப்பத்தால் ஏற்படும் பிரச்சனைகளும் அதை கடந்து தன் காதலியை ஆர் ஜே பாலாஜி கைப்பிடித்தாரா என்பது தான் கதை

இந்தியில் வெற்றி பெற்ற பதாய் ஹோ படத்தின் ரீமேக் ஆனால் இந்தியில் இருந்த பல விசயங்களை தவிர்த்து விட்டு தமிழுக்கு ஏற்றார் போல் செய்திருக்கிறார்கள்

சமீபமாக பாக்யராஜ் விக்ரமன் படங்கள் வருவது குறைந்து விட்டது குடும்பத்தோடு சிரிப்பதற்கு என படங்கள் எடுக்கப்படுவதில்லை அந்த ஏக்கத்தை இந்தப்படம் போக்கியிருக்கிறது.

ஆர்.ஜே.பாலாஜி, நடிப்பு வரவில்லை என்றாலும் நல்ல கதை செட்டப்பில் தன்னை வைத்துகொண்டு சமாளித்து விடுவார். இப்படத்தில் சென்டிமென்ட் காட்சிகளில் கொஞ்சம் கவனம் இருக்கிறார். பெற்றோர்கள் மீது கோபப்படுவது, பாசத்தை புரிந்து கொள்வது என நடிப்பில் முன்னேற்றம். நாயகியாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி சிறப்பாக செய்து இருக்கிறார்.

 

படத்திற்கு பெரிய பலம் சத்யராஜ் மற்றும் ஊர்வசி கூட்டணி. வயிறு குலுங்க சிரிக்க வைப்பதோடு உணர்வுபூர்வமான காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார்கள்.
பல காட்சிகளில் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தன் அம்மாவை சமாளிப்பது, மனைவியை அரவணைப்பது என கிடைக்கும் இடங்களில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார் சத்யராஜ். ஊர்வசியின் நடிப்பை தனியாக பாராட்ட தேவையில்லை வரும் காட்சிகள் அனைத்திலும் மனதை கவர்கிறார்

 

50 வயதில் கர்ப்பம் அடைவது, இப்போதைய சமூகத்தில் ஏற்படுத்தும் சிக்கலை அதன் பிரச்சனையை காதல், பாசம், உணர்வு என அனைத்தும் கலந்து அழகாக சொல்லி இருக்கிறார்கள் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன். பார்ப்பவர்களுக்கு முகம் சுளிக்காமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி திரைக்கதை அமைத்ததற்கு பாராட்டலாம்

கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு. அதேபோல், கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

மேக்கிங்கில் மட்டும் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்
மொத்தத்தில் ‘வீட்ல விசேஷம்’ சிரிப்பு மருந்து.