29
Nov
சொர்க்கவாசல் இன்று முதல் திரையரங்குகளில் சென்னை மத்திய சிறையில் ஏற்பட்ட மிகப் பெரிய கலவரம். இது தான் படத்தின் மையம். அப்பாவி ஒருவன் அந்தக் கலவரத்தில் மாட்டிக்கொண்டால் என்னாகும்? என்பது தான் ஒன் லைன். உண்மை சம்பவங்களை டீடெயிலான திரைக்கதையாக்கி, அட்டகாசமான படமாகத் தருவது ஹாலிவுட்டில் சகஜம். ஆனால் தமிழில் அது பெரிதாக நடந்ததே இல்லை. இங்கு உண்மையைச் சொன்னால், பிரச்சனை வந்து விடும். மூலைக்கு மூலை நியாயவான்கள் கிளம்பிவிடுவார்கள். ஆனால் இதையெல்லாம் தாண்டி, அசுர உழைப்புடன் பக்கா டீடெயிலுடன், ஒரு அருமையான சினிமா அனுபவத்தை தந்திருக்கிறார்கள் சொர்க்கவாசல் படக்குழுவினர். டிரெய்லர் பார்த்து, எதிர்பார்த்து காத்திருந்தீர்களானால், படத்தை கண்டிப்பாக பார்த்து விடுங்கள் படம் உங்களை ஏமாற்றாது. ஜெயிக் கலவரம் ஒரு கேயாஸ்! அதைச்சுற்றி கதை எழுதும்போது, எக்கசக்க கேரக்டர் இருக்கும், அதை வைத்துக் கொண்டு திரைக்கதை எழுதுவது, இன்னும் கஷ்டம், இதில் விசாரணை வழியே அந்த கலவரத்தின் பின்னணியை அலசுவதாக திரைக்கதையை…