18
Jun
ரயில்வே வேலை பார்க்கும் சத்யராஜ், மனைவி ஊர்வசி மகன்கள் ஆர்.ஜே.பாலாஜி, விஸ்வேஷ் மற்றும் தாயுடன் வாழ்ந்து வருகிறார். இதில் ஆசிரியராக பணிபுரியும் ஆர் ஜே பாலாஜி, பள்ளியின் நிறுவனர் மகளான அபர்ணா பாலமுரளி காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யும் நிலையில், ஆர்.ஜே.பாலாஜி, தனது தாய் ஊர்வசி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். ஊர்வசியின் கர்ப்பத்தால் ஏற்படும் பிரச்சனைகளும் அதை கடந்து தன் காதலியை ஆர் ஜே பாலாஜி கைப்பிடித்தாரா என்பது தான் கதை இந்தியில் வெற்றி பெற்ற பதாய் ஹோ படத்தின் ரீமேக் ஆனால் இந்தியில் இருந்த பல விசயங்களை தவிர்த்து விட்டு தமிழுக்கு ஏற்றார் போல் செய்திருக்கிறார்கள் சமீபமாக பாக்யராஜ் விக்ரமன் படங்கள் வருவது குறைந்து விட்டது குடும்பத்தோடு சிரிப்பதற்கு என படங்கள் எடுக்கப்படுவதில்லை அந்த ஏக்கத்தை இந்தப்படம் போக்கியிருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி, நடிப்பு வரவில்லை என்றாலும் நல்ல கதை செட்டப்பில்…