தல-தளபதி படங்கள் ரிலீஸ் தேதி!

0
256

 

கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு திரைத்துறை இப்போது தான் மூச்சு விட்டிருக்கிறது. சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மீண்டும் மக்களை தியேட்டர் நோக்கி இழுத்து வந்தது. ரஜினியின் அண்ணாத்த கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், தீபாவளிக்கு தியேட்டர்கள் கலைகட்சியதென்னவோ உண்மை. அடுத்தடுத்து விஜய், அஜித் படங்கள் முதலாக பல பெரிய நடிகர்களின் பெரும் பட்ஜெட் படங்கள் ரிலீஸுக்கு வரிசை கட்டி நிற்கின்றன. ஒரு பக்கம் நேரடி தமிழ் படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி இருக்கும் வேளையில் பல தெலுங்கு படங்களும் கூட தமிழிலும் இணைந்து பன்மொழி தயாரிப்பாக உருவாகி, ரிலீஸுக்கு காத்திருக்கின்றன

வரும் மாதங்களில் அடுத்தடுத்த மாதங்களில் என்னென்ன படங்கள் ரிலீஸை உறுதி செய்து, தியேட்டருக்கு வரவுள்ளது என்பதை பார்க்கலாம். முதலில் அடுத்த வாரத்தில் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு படம் நவம்பர் 25 அன்று வெளியாகிறது. இப்ப்டத்துடன் சசிகுமார் நடித்துள்ள ராஜவம்சம் படமும் நவம்பர் 25 அன்று வெளியாகிறது.

அடுத்து டிசம்பர் மாதத்தில் மலையாளத்தில் பெரும் பட்ஜெட்டில் மோகன் லால் நடிப்பில் உருவாகியுள்ள மரக்கர் படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகிறது. 3 ஆம் தேதி ஜிவி பிரகாசின் ‘ பேச்சிலர்’ மற்றும் அதர்வாவின் “தள்ளிப்போகதே “ ப்ளூ சட்டை மாறனின் ஆண்டி இந்தியன் டிசம்பர் 9 ஆம் தேதி வசந்தபாலனின் ஜெயில் படமும் 10 ஆம் தேதி குருதியாட்டம் திரைப்படமும் வெளியாகிறது

டிசம்பர் 17 ஆம் தேதி ஆனந்தம் விளையாடும் வீடு படமும், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் புஷ்பா படமும். வெளியாகிறது. உலகம் முழுக்க எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள ஹாலிவுட் படமான ஸ்பைடர் மேன் படமும் வெளியாகிறது.

நானி நடித்த ஷியாம் ஷிங்காரம் படம் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது.

2022 ஜனவரி மாதம் பொங்கலுக்கு முன்னதாக ஜனவரி 7 ஆம் தேதி ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர என் டி ஆர் நடிப்பில் இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள RRR படம் வெளியாகிறது

அடுத்ததாக தெலுங்கில் முன்னணி சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் மலையாள கிளாசிக்காம் அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக் ஜனவரி 12 அன்று வெளியாகிறது.. அதே போல் பாகுபலி பிரபாஸ் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகியுள்ள ராதே ஷியாம் படம் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகிறது.

தமிழில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகிறது.

டிசம்பர் மாதம் வெளியாகுமென எதிர்பார்க்கபட்ட சூர்யாவின் எதறகும் துணிந்தவன் பிப்ரவி மாதம் 4 ஆம் தேதி வெளியாகிறது. அதே பிப்ரவி மாதத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும்
பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது

இவையாவும் இப்போது ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்ட படங்கள் இவையில்லாமல் இன்னும் பல படங்கள் எல்லாப்பணிகளும் முடிந்து ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றன.